(PHOTOS) பின்னழகினால் 13 லட்சம் பேரை பின்தொடரச் செய்த யுவதி
அமெரிக்காவைச் சேர்ந்த ஜென் செட்லர் எனும் யுவதி நடிகையோ பாடகியோ அல்ல. ஆனால் சமூக வலைத்தளங்களில் ஒன்றான இன்ஸ்டகிராமில் சுமார் 13 லட்சம் பேர் அவரை பொலோ செய்கின்றனர்.
இதற்கு முக்கிய காரணம் அவரின் பின்னழகு. அத்துடன் உடலை கட்டுக்கோப்பாக வைத்திருக்கும் ஜென் செட்லர், தனது உடற்பயிற்சிகள் மூலமும் பெரும் எண்ணிக்கையானோரைக் கவர்ந்துள்ளார்.
தன்னை விதவிதமாக புகைப்படங்களைப் பிடித்து ஜென் செட்லர் வெளியிடுகிறார். அதனால் தினமும் அவரின் ரசிகர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டு செல்கிறது.
அண்மையில் நியூயோர்க் மிட்டவுன் ரயில் நிலையத்தில் இரு சுவர்கள் மீது கைகளையும் கால்களையும் அழுத்திக்கொண்டு அந்தரந்திலிருந்தவாறு ஜென் செட்லர் போஸ் கொடுத்தார். இதைப் பார்ப்பதற்கும் பலர் திரண்டனர்.
அது உண்மையான தோற்றமா எனக் கேட்டார் ஒருவர். மற்றொரு இளைஞர் தன்னை திருமணம் செய்துகொள்ளுமாறு ஜென் செட்லரிடம் கோரினார். கூட்டம் திரள்வதைப் பார்த்து பொலிஸ் உத்தியோகஸ்தர்களும் அங்கு வந்தனர்.
பின்னர் அவர்களும் ஜென் செட்லரின் சாகசங்களைப் பார்க்க ஆரம்பித்தனர். 5 அடி உயரமான இவரின் எடை 50 கிலோகிராம் ஆகும்.
‘நான் எங்கே சென்றாலும் மக்கள் என்னை அடையாளம் கண்டுகொள்கின்றனர்’ என்கிறார் ஜென் செட்லர்.
கடந்த 2012 மார்ச் மாதம் இன்ஸ்டகிராம் இணையத்தளத்தில் அவர் இணைந்தார். இப்போது 13 லட்சம் பேர் அவரை இன்ஸ்டகிராமில் பின்தொடர்கின்றனர்.
அமெரிக்காவின் பிரபல பாடகி ரிஹானா, கால்பந்தாட்ட வீரர் டெரல் ஒவென்ஸ், கூடைபந்தாட்ட நட்சத்திரமான அமர் ஸ்டோடெமைர் ஆகியோரும் ஜென் செட்லரை இன்ஸ்டகிராமில் பின்தொடர்பவர்களில் அடங்குகின்றனர்.
ஆனால், தான் உடற்பயிற்சி செய்வதைப் பார்ப்பதற்கு பெரும் எண்ணிக்கையானோர் கூடிவிடுவதால் இனிமேலும் பொது இடங்களில் உடற்பயிற்சியிலீடுபடுவதற்கு தான் விரும்பவில்லை என அவர் கூறியுள்ளார். ‘
நான் எங்குபோனாலும் அது பெரிய கூட்டம் கூடிவிடுகிறது. என்னை மற்றவர்கள் வெறித்துப் பார்ப்பதை நான் விரும்பவில்லை’ என அவர் கூறுகிறார்.
எவ்வாறெனினும் இவர் இணையத்தளங்களில் தன்னைத்தானே படம்பிடித்து (செல்ஃபீ) வெளியிட்டுக்கொண்டிருக்கிறார். அதிகமாக முகத்தை படம்பிடிப்பதில்லை எனது உடலையே அதிகம் படம்பிடிக்கிறேன் என அவர் ஒப்புக்கொள்கிறார்.
இணையத்தளங்களில் பிரபலமானவராக இருப்பதால் அவருக்கு வருமானம் கிடைக்கிறது. ஆரோக்கிய பானங்கள், போஷாக்கு உணவு தயாரிக்கும் நிறுவனங்கள் இவரை தமது விளம்பரங்களுக்கும் ஊக்குவிப்புத் திட்டங்களுக்கும் பயன்படுத்துகின்றன.
More Stories
மன இறுக்கம் குறைக்கும் கலை! (அவ்வப்போது கிளாமர்)
உனது ஆடையையும்எனது ஆடையையும்அருகருகே காய வைத்திருக்கிறாயேஇரண்டும்காய்வதை விட்டுவிட்டுவிளையாடிக் கொண்டிருப்பதைப் பார்! – தபூ சங்கர் கோபியும் சந்தியாவும் புதிதாகத் திருமணம் செய்து கொண்டவர்கள். பன்னாட்டு நிறுவனங்களில் பணிபுரிபவர்கள்....
நீ பாதி நான் பாதி!! (அவ்வப்போது கிளாமர்)
முடியாத தவம்என்னைக் குத்திக் கிளறும்வன்மம் மிகுந்த உன் அழகைஎப்படியடி பொறுத்துக் கொள்வேன்இரு கண்களையும்இறுக மூடி… – நா.வே.அருள் செந்தில்நாதன் பிசினஸ்மேன். அவருக்கு கல்லூரியில் படிக்கும் மகனும் மகளும்...
செக்ஸ் வேண்டாம்… செல்போனே போதும்!! (அவ்வப்போது கிளாமர்)
இன்று மொபைல் போன் மோகம் வயது வித்தியாசமில்லாமல் அனைவரையும் ஆட்டி வைக்கிறது என்பது நாம் அறிந்த ஒன்றுதான். ஒரு நிமிடம் கூட கையில் மொபைல் இல்லாமல் பெரும்பாலானோரால்...
பாலியல் உறவாலும் டெங்கு பரவும்?! (அவ்வப்போது கிளாமர்)
முறையற்ற பாலியல் உறவால் எய்ட்ஸ் போன்ற நோய்கள் பரவும் என்பதைக் கேள்விப்பட்டிருப்போம். தற்போது டெங்கு காய்ச்சலும் பரவும் என்பதை ஸ்பெயின் நாட்டு ஆய்வாளர்கள் உறுதிப்படுத்தியிருக்கிறார்கள். டெங்கு காய்ச்சலை...
போர்னோகிராபியை பற்றி பெண்கள் என்ன நினைக்கிறார்கள்?! (அவ்வப்போது கிளாமர்)
ஆண்கள் காட்சித்தூண்டுதலுக்கு ஆட்படுகிறவர்கள். அதனால்தான் ஒரு பெண்ணைப் பார்த்த உடனே காதலில் விழுகிறார்கள். ஆனால், பெண்கள் அப்படி காட்சித்தூண்டலுக்கு ஆட்படுகிறவர்கள் அல்ல. அதன் பின்னிருக்கும் காரண, காரியங்களை...
காதலிக்க நேரமில்லை!! (அவ்வப்போது கிளாமர்)
திருமணத்தின் மிக முக்கிய அம்சமான தாம்பத்ய உறவு என்ற ஒன்றே இல்லாமல் பெரும்பாலான தம்பதிகள் வாழ்ந்து வருவதாகக் கூறி கலவரப்படுத்துகிறது சமீபத்திய புதிய மருத்துவ ஆய்வறிக்கைகள். இதற்கு...
Average Rating