இனம் காணப்படவேண்டிய போலி இணைய தளங்கள்…!

Read Time:7 Minute, 45 Second

repo.Media_Cartoonலங்காசிறி என்ற இணையதளம் புலிகளின் பிரதிபலிப்பை அப்படியே வெளிப்படுத்துகின்ற இணையதளம். புலிகளின் சிறுவர் சேர்ப்பு ஏஜெண்டாக இருந்த கூட்டமைப்பு எம்பி சிறிதரனின் சகோதரனால் சுவிஸ் நாட்டில் இருந்து நடத்தப்படுவதாக ஒரு தகவல். மரண அறிவித்தல் தவிர்ந்து வேறு ஒரு உருப்படியான தகவல்களும் அதில் காணமுடியாது. மரண அறிவித்தல்கள்மூலம் கோடிக்கணகான பனத்தைச் சம்பாதிக்கின்றது லங்காசிறி.

FAKE NEWS LANKASRIஅது தவிர்ந்து மகிந்த அரசு, ஈபிடிபி, மற்றும் கருணா, பிள்ளையான் போன்றவர்காலைப் பற்றிய உண்மைக்கு முரணான செய்திகளை எழுதி புலி ஆதரவாளர்களை மகிழ்விக்கும் ஒரு முன்னணி இணையதளம் லங்காசிறி. இலங்கையில் இது தடை செய்யப்பட்டுள்ளது.

“பேஸ் புக்” விபரீதத்தால் வாழ்வை இழந்த யாழ் யுவதியின் பரிதாபம் என்ற தலைப்பில் லங்காசிறியின் கிளையான ஜேவிபி நியூஸ் என்ற இணையதளத்தில் ஒரு பொய்யான செய்தியை வெளியிட்ட லங்காசிறி அந்தச் செய்தி பொய் என்று சம்பந்தப்பட்ட பெண்ணின் மூலம் நிரூபிக்கப்ட்டதும் அந்தச் செய்தியை வேகமாக அகற்றியுள்ளது. இந்த இணையதளங்கள் அப்பாவித் தமிழ்ப் பெண்களின் வாழ்க்கையோடு விளையாடுகின்றன..

JVP FAKE NEWS 1தமிழ்வின், ஜேவிபிநியூஸ், லங்காறோட், கனடா மிறர் என்ற பல்வேறு கிளைப்பெயர்களில் பல்வேறு நாடுகளில் முகவர்களை வைத்துக் கொண்டு வதந்திகளை பரப்பிக் கொண்டிருக்கிறது லங்காசிறி.

யாழ்ப்பாணத்தில் உதயன் வெளியிடும் செய்திகள் உண்மையாகி விடுகின்றன. அந்தச் செய்திகள் உலகம் முழுவதும் ஏனைய இணையதளங்கள் மூலம் பரவி விடுகின்றன.

இந்தியாவில் இறந்த ஒருவரின் உடலுடன் கட்டுநாயக்காவிலிருந்து யாழ்ப்பாணம் சென்று கொண்டிருந்த 11 பேரைக் காணவில்லை. இது உதயன் செய்தி.. கடுகதி வேகத்தில் உலகம் முழுவது பரவியது.

ஆனால் இறந்தவர் என்று சொல்லப்பட்டவர் உயிருடன் வந்தார். தான் உயிருடன் இருக்கும் போது நீங்கள் எப்படி இந்தச் செய்தியை வெளியடலாம்? என்று உதயன் அலுவலகத்திற்கு நேரடியாகச் சென்று கேட்டார். இதை உதயன் எழுதியது, ஆனால் தவறான செய்திக்கு மன்னிப்புக் கோரவில்லை..

JVP FAKE NEWSஇப்படி ஒன்றல்ல இரண்டல்ல இவர்களின் செய்திகள் பெரும்பாலானவை உண்மைக்குப் புறம்பானவை…

முகநூல் மூலம் அறிமுகமான ஒருவரைத் திருமணம் செய்ய கனடாவிலிருந்து சென்ற பெண் எரித்துக் கொலை., ஒருவன் பெயரைக் குறிப்பிட்டு அவர் நகைகளுடன் தலைமறைவு., புத்தூரில் சம்பவம். இப்படி ஒரு செய்தி…

ஆனால் புத்தூர் பொலிசாரிடம் விசாரித்த போது அப்பை ஒரு கொலை நடைபெற்றதாக பொலிசில் பதிவு இல்லை என்று அவர்கள் கூறுகிறார்கள். கனடாவில் அப்படி ஒரொ பெண்ணும் கொல்லப்பட்டதாக கனேடியக் குடிவரவு இலாகாவிற்கோ, அரசாங்கத்திற்கோ தகவல் இல்லை. கனேடியப் பிரசை ஒருவர் இலங்கையில் கொல்லப்பட்டால் அது கனேடிய அரசாங்கத்திற்குத் தெரிய வராமல் போகாது.

athirvu-FAKE NEWSஇலங்கையில் இடம்பெறும் தனிப்பட்டவர்களின் கொலைகளை அரசாங்கம் அல்லது ஒட்டுக்குழு, துணை இராணுவக்குழு என்று முடிச்சுப் போட்டு செய்திகளை வெளிநாடுகளில் பரப்புகிறார்கள். அப்படியான செய்திகளை வெளிநாடுகளில் பரப்புவதில் லங்காசிறி இணையதளம் முதலிடம் வகிக்கிறது.

கனடாவிலிருந்து சென்ற இளைஞர் கிளிநொச்சியில் வெட்டிக் கொலை.. இராணுவம் செய்ததாக உலகம் முழுவது செய்தி பரவியது. தமிழ்நெற் கோபி அது இராணுவம் செய்ததாகத் தான் ரொறொன்ரோ சண் பத்திரிகைக்குத் தகவல் வழங்கினார்.

ஆனால் கொலையாளிகள் கைது செய்யப்பட்டனர்., அதில் முன்னாள் புலிகளும் அடங்குவர்.

இப்படி சமீபத்தில ஒரு கிறிக்கட் வீரர் கொல்லப்பட்டதற்கு அவர் மனைவியைச் சர்வதேசப் பொலிஸ் தேடுவதாக ஒரு செய்தி வெளிவந்தது. ஆனால் அந்தக் கொலை இடம்பெற்ற போது இராணுவத்தினர் தான் கொலை செய்ததாக இணைய தளங்கள் செய்தி வெளியிட்டிருந்தன.

சமீபத்தில் நாச்சிமார் கோவில் தேர்க் கோபுரத்தில் ஒரு பெண்ணின் சடலம் காணப்பட்டது. அதையும் இராணுவத்தினர் செய்ததாகத் தான் இந்த இணையதளங்கள் செய்தி வெளியிட்டன. ஆனால் அந்தப் பெண்ணின் கொலை சம்பந்தப்பட்ட கொலையாளிகள் ஆனைக்கோட்டையில் வைத்துக் கைது செய்யப்பட்டனர்.

ஆனால் அந்த உண்மையை எந்த ஊடகங்களும் வெளிக் கொணரவில்லை. ஏனென்றால் அந்த ஊடகங்கள் பற்றிய உண்மைத் தன்மையை வெளிப்படுத்தி விடும் என்ற அச்சம்!

அதிர்வு, லங்காசிறி, கனடாமிறர், ஜேவிபிநியூஸ், லங்காறோட், தமிழ்வின் போன்ற இணையதளங்களில் வரும் செய்திகளை வாசிப்பவர்கள் தயவுசெய்து அந்தச் செய்திகளை சேகரித்து வையுங்கள். உண்மை வெளியில் வரும்போது உங்களுக்கு உதவலாம்.

இவர்களின் செய்திகளால் பாதிக்கப்படுபவர்கள் உங்கள் உறவினர்களாகக் கூட இருக்கலாம். சட்ட நடவடிக்கை எடுப்பதற்கு மிகவும் உதவியாக இருக்கும்.

காரணம் தாங்கள் வெளியிட்ட செய்திகள் பொய் என்று அம்பலப்பட்டவுடன் உடனே செய்திகளை அகற்றி விடுகிறார்கள். பத்திரிகை என்றால் அப்படிச் செய்ய முடியாது. பத்திரிகையை ஆதாரமாக வைத்திருக்க முடியும். அதனால்தான் யாழ் உதயன் பத்திரைகையில் இப்படியான செய்திகளை எழுதுவதில்லை.

ஒன்லைன் உதயனில மட்டும் பொய்யான செய்திகளை வெளியிடுகின்றது. நீங்கள் இந்த இணயதளங்களில் வரும் இப்படியான செய்திகளை சேகரித்து வைக்க முடியும். CYBER BULLYING என்ற சர்வதேச சட்டம் இதற்காக உள்ளது. இந்த இணையதளங்களை தடை செய்ய மிகவும் உதவியாக இருக்கும்.

Thanks…  http://www.ilankasri.com/

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post யாழ்ப்பாணத்தில் தெய்வத்திற்கு பயந்த திருடர்கள்
Next post பாகிஸ்தானில் 100 ரூபாய் திருடிய வேலைக்கார சிறுமி அடித்துக் கொலை