சவுதியில் மேலும் சில இலங்கையர்கள் நிர்க்கதி

Read Time:2 Minute, 3 Second

Saudis-illegalசவுதி அரேபியாவிற்கு தொழில் நிமித்தம் சென்று நிர்க்கதிக்குள்ளான இலங்கையர்கள் சிலர், அந்நாட்டின் தமாமில் உள்ள 91ஆம் இலக்க முகாமில் தங்கியுள்ளதாக தெரியவந்துள்ளது.

உணவு தட்டுப்பாடு உள்ளிட்ட சில பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டிருப்பதாகவும் அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

இதுதொடர்பாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியக ஊடகப் பேச்சாளரும், பிரதி பொது முகாமையாளருமான மங்கல ரந்தெனியவிடம் வினவியபோது, இந்த இலங்கையர்கள் குறித்து கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக கூறினார்.

தூதரக உத்தியோகத்தர்களின் உதவியுடன், வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியக தொடர்பாடல் பிரிவு ஆராய்ந்து பார்த்ததாக அவர் சுட்டிக்காட்டினார்.

இந்த பணியாளர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு பெற்றுக்கொடுக்கப்படுவதற்கு முன்னதாக, அவர்கள் தங்கள் பணியிடங்களில் இருந்து வெளியேறியுள்ளமை தெரியவந்துள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியக ஊடகப் பேச்சாளர் குறிப்பிடுகின்றார்.

ஒப்பந்தத்தின் பிரகாரம் உரிய சம்பளத்தை வழங்குவதற்கு அவர்களின் எஜமானர்கள் இணக்கம் தெரிவித்திருப்பதாக சுட்டிக்காட்டிய மங்கல ரந்தெனிய, இந்த பணியாளர்கள் விரும்பும் பட்சத்தில் மீண்டும் பணியில் அமர்த்துவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்க முடியும் என மேலும் தெரிவிக்கின்றார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post 120 நாய்களை கொண்டு, தனது மாமாவை ஆடையின்றி கடித்து குதற வைத்து கொன்ற, வடகொரிய அதிபரின் கோரமுகம்!
Next post யாழ்ப்பாணத்தில் தெய்வத்திற்கு பயந்த திருடர்கள்