பெயின்ட் குடிக்கும் பெண்

Read Time:1 Minute, 52 Second

009cஐக்கிய அமெரிக்காவின் தென் மாநிலமான அலபாமாவைச் சேர்ந்த பெண்ணொருவர் நிறப்பூச்சினை (பெயின்ட்) குடிக்கும் பழக்கத்தை கொண்டுள்ளார்.

இரண்டு பிள்ளைகளின் தாயான ஹெதர் பீல் என்ற 43 வயதுடைய இப்பெண் குறித்த தகவல்கள் இணையத்தில் பரவலாக பேசப்படுகின்றன.

ஹெதர் பீலின் தயார் இறந்த பின்னர் கடும் விரக்தியில் இருந்தபோது நிறப்பூச்சினை குடிக்கத் தொடங்கியதாகவும் அதுவே பின்னர் வழக்கமாக மாறிவிட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மூன்று வருடங்களாக பெயின்ட் குடிக்கும் இப்பெண் இதுவரை 3 பெரல் பெயின்ட் குடித்துள்ளார். இது அப்பெண் வசிக்கும் வீட்டின் பெரிய அறையை இரண்டு தடவை நிறப்பூச்சு செய்வதற்கு சமனானதாகும் என அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

‘பெயின்ட் குடிக்கும்போது அது எனக்குச் சிரமமானதாகத் தோன்றுவதில்லை. கட்டியான பாலை குடிப்பது போன்ற உணர்வே ஏற்படும்.

எனினும் அது எந்தவிதமான சுவையையும் தருவதில்லை. மாறாக ஒருவகை இரசாயனம் போலிருக்கும்’ என மனந்திறந்து கூறுகிறார் ஹெதர் பீல்.

அத்துடன் தனக்க பெயின்ட் குடிக்கும் பழக்கம் இருப்பது தனது பிள்ளைகளுக்கு தெரியாது எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post சிறுவர் இல்ல சிறுமியை வல்லுறவுக்கு உட்படுத்திய மூவருக்கு விளக்கமறியல்
Next post சிம்புவை அலைய விடும் ஹன்சிகா!