5ஆவது காலை தொடும் பெண்களுக்கு ஆண் குழந்தைகள் பிறக்கும் அதிசயம்

Read Time:3 Minute, 24 Second

3592Cow-3ஆண் குழந்தைகள் பிறக்க இன்று பல்வேறு வழிகள் மேற்கொள்ளப்படுகின்றன. ஆனால் 5 கால்களைக் கொண்ட மாட்டின் 5ஆவது காலினைத் தொடும் பெண்களுக்கு ஆண் குழந்தைகள்கள் பிறக்கும் அதிசயமொன்று நிகழ்வதை நீங்கள் அறிந்துள்ளீர்களா?

இந்தியாவின் ராய்பூரிலுள்ள 3 வயதான ஆண் கன்றுக்குட்டி ஒன்றுக்கு 5 கால்கள் உள்ளன. 5கால்கள் என்பதே வியப்பானதோர் விடயம்தான்.

அதனிலும் ஆச்சரியம் என்னவென்றால் இம்மாட்டின் 5 ஆவது காலைத் தொடும் பெண்களுக்கு ஆண் குழந்தை பிறக்கிறதாம்.

ராஜ் பிரதாப் என்பருக்குச் சொந்தமான இந்த கன்று ராஜு என அழைக்கப்படுகின்றது.

4 பெண் பிள்ளைகளின் தாய் ஒருவர் தனது அடுத்த குழந்தை ஆண் குழந்தையாகப் பிறக்க வேண்டும் என ராஜுவின் 5 ஆவது காலினை தொட்டு வேண்டியுள்ளார்.

பின்னர் கடந்த பெப்ரவரி மாதம் குறித்த பெண்ணுக்கு இரட்டை ஆண் குழந்தை பிறந்துள்ளது. இதனையடுத்த அப்பிரதேசத்தில் இந்த 5 கால் மாடு பிரபல்யமாகியுள்ளது.

5 கால் மாட்டின் செய்தி பரவியதையடுத்து 30 கர்ப்பிணிப் பெண்கள் இம்மாட்டின் காலினை தொட்டு வணங்குவதற்கு 500 ரூபா வரையில் பிரதாப்பிற்கு கட்டணம் செலுத்தியுள்ளனர்.

அதிசயமாக அப்பெண்கள் அனைவருக்கும் ஆண் குழந்தைகள் பிறந்துள்ளன.

இதனால் அதியமான தனது கனறில் அதித நம்பிக்கைகொண்ட பிரதாப், தனது மாட்டின் கால்களைத் தொட்ட பெண்களுக்கு பெண் பிள்ளை பிறந்தால் பணத்தை திருப்பித் தருவதாக தெரிவித்துள்ளார்.

இது குறித்து பிரதாப் கூறுகையில், எங்களுக்கு ஏன் இப்படி நடந்தது என எனக்குத் தெரியாது. ஆனால் ராஜுவிடம் ஒரு பரிசு உள்ளது. இதனை முழு உலகுடனும் பகிர்ந்துகொள்ள வேண்டும்.

ஐரோப்பா அல்லது அமெரிக்காவுக்கு ராஜுவைக் எடுத்துச்சென்று அங்குள்ள ஒவ்வொரு ஜோடிகளையும் மகிழ்ச்சிப்படுத்துவதாக சில நாட்களில் நான் கனவு காண்பேன் எனத் தெரிவித்தள்ளார்.

கடந்த டிசெம்பர் 23 ஆம் திகதி வரையில் ராஜுவின் காலைத் தொட்ட 32 பெண்களுக்கும் ஆண் குழந்தை பிறந்துள்ளது. இதனால் அப்பெண்கள் அனைவரும் இம்மாடு குறித்த தங்களது மகிழ்ச்சியை வெளியிட்டுள்னர்.

ஒவ்வொரு 5 மில்லியன் மாடுகளுக்கு ஒரு மாடு இவ்வாறு 5 காலுடன் பிறக்கும். இது ஒரு அரிதான நிலையாகும் எனக் கூறப்படுகின்றது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ராதிகா சிற்சபேசன் நலன்புரி முகாம்களுக்கு விஜயம்
Next post உறைய வைக்கும் குளி­ரையும் பொருட்­ப­டுத்­தாது நண்­பனின் உடலை காவல் காத்த நாய்