“விபச்சாரியாக வேலை செய்ய பெண்கள் தேவை” அதிகாரப்பூர்வ விளம்பரத்தால் பரபரப்பு!!

Read Time:4 Minute, 13 Second

prostitutionஇங்கிலாந்து அரசின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் ‘விபச்சாரியாக வேலை செய்ய பெண்கள் தேவை’ என்று வெளியான விளம்பரத்தால் தலைநகர் லண்டனில் வசிக்கும் மக்களிடையே பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

வேலை நிமித்தமாக தன்னந்தனியே வெளிநாடுகளுக்கு செல்லும் ஆண், பெண்களுக்கு பல நாடுகளில் இயங்கிவரும் தனியார் நிறுவனங்கள் அவர்களின் வழித்துணைக்கு பாதுகாவலர்களாக எதிர் பாலினத்தை சேர்ந்தவர்களை பணியமர்த்துகிறது.

இவ்வாறு பணியமர்த்தப்படும் நபர்கள் அந்நாட்டில் உள்ள அனைத்து தகவல்களையும் விரல் நுனியில் வைத்திருப்பார்கள். தனியாக வரும் ஆணுக்கு துணையாக அழகான பெண்களையும், பெண்ணுக்கு துணையாக இளமையும், நல்ல உடல்கட்டும் கொண்ட ஆண்களையும் இந்த நிறுவனங்கள் ஏற்பாடு செய்து தருகின்றன.

ஒருவர் எந்த நாட்டுக்கு போக வேண்டுமோ..? அந்த நாட்டில் பிரபலமாக இயங்கிவரும் இதுபோன்ற நிறுவனங்களுக்கு முன்கூட்டியே தகவல் அளித்துவிட்டால் போதும். செல்பவர் ஆணாக இருந்தால் அழகான பெண்களின் புகைப்படங்களையும், பெண்ணாக இருந்தால் கட்டிளங்காளையர்களின் புகைப்படங்களையும் இந்த நிறுவனம் ‘இ-மெயில்’ மூலமாக அனுப்பி வைத்துவிடும்.

வாடிக்கையாளர்களுக்கு பிடித்த நபரை தேர்வு செய்து தகவல் தெரிவித்து, உறுதிபடுத்தி விட்டால் அவர்களை விமான நிலையத்திற்கே வந்து அந்த நபர்கள் அழைத்து செல்வார்கள்.

அந்த நேரம் முதல் வெளிநாட்டு வாடிக்கையாளரின் நிழல் போலவே இருந்து, அவர் போகும் இடங்களுக்கு எல்லாம் கூடவே சென்று, அவர் செலவிலேயே சாப்பிட்டு, அவர் தங்கும் அறையிலேயே இவர்கள் படுத்து தூங்குவார்கள்.

‘எஸ்கார்ட் சர்வீஸ்’ என்றழைக்கப்படும் இந்த சேவைக்கு வாடிக்கையாளர்களிடம் இருந்து ஒரு பெரிய தொகையை கட்டணமாக பெறும் இந்த நிறுவனங்கள், தங்களது கமிஷன் போக பணியமர்த்தப்படும் நபர்களுக்கு சொற்ப தொகையை சம்பளமாக தருகின்றன.

இவ்வகையில், இங்கிலாந்தில் இயங்கிவரும் ‘ஹார்னி எஸ்கார்ட்ஸ்’ என்ற நிறுவனத்தின் விளம்பரம் ஒன்று அரசின் வேலைவாய்ப்பு துறையின் அதிகாரபூர்வ இணயதளத்தில் தற்போது வெளியாகியுள்ளது.

மேற்கண்ட நிறுவனத்தில், ‘தங்களுக்கு வசதியான வேலை நேரங்களில் பணியாற்ற பெண்கள் தேவைப்படுகிறார்கள்.

அடிப்படை தகுதியாக செக்ஸ் உறவு வைத்துக் கொள்வதில் பிரியம் இருந்தால் போதும். விருப்பம் உள்ள பெண்களுக்கு ஒரு மணி நேரத்துக்கான சம்பளமாக 10 பவுண்டுகள் (இந்திய மதிப்புக்கு சுமார் 1020 ரூபாய்) வழங்கப்படும் என அந்த விளம்பரத்தில் கூறப்பட்டுள்ளது.

இங்கிலாந்து அரசின் வேலை வாய்ப்பு மற்றும் ஓய்வூதிய அமைச்சகத்தின் அனுமதியுடன் வெளியிடப்பட்டுள்ள இந்த விளம்பரத்தை ஆதரித்தும், எதிர்த்தும் லண்டன் வாசிகளிடையே தற்போது சூடான பட்டிமன்றங்கள் நடைபெற்று வருகின்றன.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post புலிகளுக்கு ஆயும் விநியோகித்தவர், அமெரிக்க சிறையிலிருந்து விடுதலை
Next post ராதிகா சிற்சபேசன் நலன்புரி முகாம்களுக்கு விஜயம்