அமெரிக்காவில் 110 மைல் வேகத்தில் கார் ஓட்டிய பிரபல விளையாட்டு வீரர் கைது

Read Time:1 Minute, 15 Second

007dஅமெரிக்காவில் வசிக்கும் பேஸ்பால் பிரபல விளையாட்டு வீரர் யாசில் புக்(23). இவர் நேற்று புளோரிடா நெடுஞ்சாலையில் மணிக்கு 110 மைல் (177 கிலோ மீட்டர்) வேகத்தில் காரில் சென்றார்.

இந்த இடத்தில் 70 மைல் வேகத்தில் தான் வாகனம் செல்ல வேண்டும். இதனால் போக்குவரத்து போலீசார் துரத்திச் சென்று, அவரை மடக்கி கைது செய்து காரையும் கைப்பற்றினர். கைவிலங்கிட்டு அழைத்து செல்லப்பட்ட அவர் பிறகு ஜெயிலில் அடைக்கப்பட்டார்.

அவருடன் காரில் பயணம் செய்த 2 குடும்ப உறுப்பினர்கள், ஒரு நண்பர் விடுவிக்கப்பட்டனர்.

ஏற்கனவே அவர் இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் காரில் மின்னல் வேகத்தில் சென்றதாக பிடிபட்டு தண்டனையாக சமூக சேவை செய்து வெளியே வந்தார்.

தற்போது அதே குற்றத்துக்காக 2வது முறை சிக்கி இருக்கிறார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ஹீரோயின் மாயம்.., ஷூட்டிங் நிறுத்தம்
Next post புலிகளுக்கு ஆயும் விநியோகித்தவர், அமெரிக்க சிறையிலிருந்து விடுதலை