பேஸ்புக்கில் படம் போட்டதால், பெண் மீது வழக்கு பாய்ந்தது

Read Time:2 Minute, 12 Second

007bசேட்டை செய்த பூனையை பிளாஸ்டிக் ஜாரில் போட்டு அடைத்து தண்டனை கொடுத்த தைவான் பெண் மீது விலங்குகள் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பாய்ந்துள்ளது.

தைவானை சேர்ந்தவர் கிக்கி லின். பீஜிங்கின் டாய்சங் பல்கலைக் கழக மாணவி. சமீபத்தில் இவர் தனது பேஸ்புக்கில் ஒரு படத்தை வெளியிட்டிருந்தார்.

பூனை ஒன்று பிளாஸ்டிக் ஜாரில் அடைக்கப்பட்டிருந்த படம் அது. சேட்டை செய்ததால் இந்த தண்டனை என விளக்கமும் கொடுத்திருந்தார்.

இதைப் பார்த்த பலர் எதிர்ப்பு தெரிவித்தனர். பலத்த எதிர்ப்பு கிளம்பியதும், “எனக்கு என் செல்ல பூனை மீது கொள்ளை பாசம். அதனால்தான் அதை போகும் இடத்துக்கு எல்லாம் எடுத்துச் செல்வேன்.

4 கிலோ பூனையை பையில் போட்டு எடுத்துச் செல்வது கஷ்டமாக இருந்ததால் ஜாரில் போட்டு வெளியே எடுத்துச் சென்றேன். அது தப்பா?”.. என விளக்கம் கொடுத்தார் லின்.

பின்னர், தனது செயலுக்கு வருத்தம் தெரிவித்த லின், மன்னிப்பு கேட்க மறுத்து விட்டார். போலீசார் லின் வீட்டுக்கு சென்று சோதனை செய்தனர். லின் காட்டிய ஜாரில் காற்று போவதற்காக துளைகள் போடப்பட்டிருந்தது.

ஆனால் பேஸ்புக்கில் இருந்த படத்தில் துளைகள் இல்லை. இதையடுத்து அவர் மீது விலங்குகள் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

குற்றம் நிரூபிக்கப்பட்டால் கடுமையான அபராதமும் ஓராண்டு வரை சிறைத்தண்டனையும் கிடைக்கும்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post நடிகை மீரா ஜாஸ்மின் திருமணம், துபாய் இன்ஜினியரை மணக்கிறார்
Next post ஹீரோயின் மாயம்.., ஷூட்டிங் நிறுத்தம்