அமெரிக்காவின் உயரமான மலைச்சிகரத்தை ஏறி ஒன்பது வயது சிறுவன் சாதனை!

Read Time:2 Minute, 59 Second

007aஅமெரிக்காவைச் சேர்ந்த ஒன்பது வயது சிறுவனான டைலர் ஆர்ம்ஸ்டிராங் தனது தந்தை கெவின் ஆர்ம்ஸ்டிராங் மற்றும் திபெத்திய ஷெர்பா லாவா டோன்டப்புடன் அமெரிக்காவின் உயரமான அகோன்காகுவா மலை சிகரத்தை அடைந்துள்ளான்.

அர்ஜெண்டினாவின் ஆண்டிஸ் மலைத்தொடரில் இந்த சிகரம் அமைந்துள்ளது. கடல் மட்டத்திலிருந்து 6,962 மீட்டர் உயரமுடைய இந்த மலைச்சிகரத்தை கிறிஸ்துமசிற்கு முதல் நாள் இவர்கள் சென்றடைந்தார்கள். இதன் மூலம் இந்த மலைச்சிகரத்தை அடைந்தவர்களிலேயே மிகவும் இளையவன் என்ற பெருமையை இந்த சிறுவன் பெற்றுள்ளான்.

இதற்கு முன்னர் கடந்த 2008-ம் ஆண்டில் அமெரிக்க சிறுவனான மாத்யூ மோனிஸ் இந்த சாதனையைப் புரிந்திருந்தான். எந்த சிறுவர்களாலும் இதனை செய்ய முடியும். உங்கள் மனதையும், இலக்கையும் ஒருமுகப்படுத்திக்கொண்டால் வெற்றி பெறலாம் என்று டைலர் ஆர்ம்ஸ்டிராங் கூறுகின்றான். இங்கிருந்து உலகின் சூழ்நிலையை நீங்கள் காண இயலும். மேகங்கள் எல்லாம் உங்களுக்குக் கீழே செல்லும். இது உண்மையில் மிகவும் குளிரான பகுதி என்றும் அந்த சிறுவன் குறிப்பிடுகின்றான்.

சென்ற வருடம் ஆப்பிரிக்காவின் உயரமான மலைச்சிகரமான கிளிமன்ஜாரோவிற்கும் இவன் ஏறியுள்ளான். அகோன்காகுவா மலைச்சிகரத்தை அடையும் முயற்சியில் நூற்றுக்கும் மேற்பட்டோர் இதுவரை உயிரிழந்துள்ளனர். அவனுடைய வயது காரணமாக நீதிபதி ஒருவரிடமிருந்து சிபாரிசுக் கடிதம் பெற வேண்டியிருந்ததாக அவனது தந்தை கூறினார்.

தசைநார் தேய்வு ஆராய்ச்சிக்கான நிதி திரட்டும் பணியாக இந்த சாதனையில் ஈடுபட்டதால் அவர் தன் மகனுக்கு அனுமதி அளித்தார் என்று கெவின் கூறினார்.

இந்த மலையேற்றத்திற்காக தொடர்ந்து ஆறு மாதங்களுக்கு தினமும் இரண்டு முறை அவனுக்குப் பயிற்சியளித்ததாகவும், மற்றவர்கள் தாங்கள் அவனை வற்புறுத்தியதுபோல் நினைத்தாலும் உண்மையில் இது மாறான விஷயமாக இருந்தது என்றும் அவர் குறிப்பிட்டார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post இராணுவத்தில் இணைந்த தமிழ் பெண் வீட்டை எரித்த நால்வர் கைது..!
Next post கடனுக்கு பயந்து கடத்தப்பட்டதாக பொய் கூறி, நண்பர் வீட்டில் இருந்தவர் மீது வழக்கு!