ஜிம்பாப்வே: முதலை வாய்க்குள் சிக்கிய மகனை மீட்ட தந்தை..!

Read Time:1 Minute, 49 Second

14b69817-0f22-4d8d-9335-6896bed660d7_S_secvpfமுதலை வாய்க்குள் சிக்கிய மகனை தந்தை போராடி மீட்டுள்ளார். ஜிம்பாப்வேயில் உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்தவர் தபாட்ஷ்வா கசேர். இவரது 11 வயது மகன் தபிவா.

கிறிஸ்துமஸ் பண்டிகை அன்று தந்தையும், மகனும் தங்கள் கிராமத்துக்கு செல்ல ஆற்றைக் கடந்தனர். அப்போது ஒரு முதலை தபிவாவை வாயால் கவ்விப் பிடித்தது.

முதலை வாய்க்குள் சிக்கிய அவனை அப்படியே கடித்து தின்ன முயன்றது. இக்கொடூர சம்பவத்தை நேரில் பார்த்த அவனது தந்தை தபாட்ஷவாவிடம் ஆயுதம் எதுவும் இல்லை.

இருந்தாலும் ஆக்ரோஷத்துடன் முதலை மீது பாய்ந்தார். அதன் முதுகில் அமர்ந்து அதன் தாடையை அகற்ற முயன்றார். ஆனால் முடியவில்லை. தலையில் தனது கையால் ஓங்கி குத்தினார்.

இறுதியில் அதன் கண்ணில் ஓங்கி குத்தி கிழித்தார். இதனால் நிலை தடுமாறிய முதலை தனது வாயை திறந்தது. அதை தொடர்ந்து முதலை வாய்க்குள் சிக்கிய சிறுவன் தபிவா மீட்கப் பட்டான்.

ஆனால் முதலை கடித்ததில் அவனது ஒரு கால் துண்டானது. தபாட்ஷ்வா கையிலும் ரத்த காயம் ஏற்பட்டது. இவர்கள் இருவரும் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

ஜிம்பாப்வேயில் மழை காலத்தில் முதலைகள் தாக்குதல் சர்வ சாதாரணமாக நடக்கிறது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post விபத்தில் சிக்கி இரண்டாகப் பிளந்த கார், உயிர்தப்பிய இருவர்
Next post மட்டக்களப்பு: பாம்பு தீண்டி சிறுவன் உயிரிழப்பு