தாக்குதலுக்கு உள்ளான வடமாகாண சபை பிரதி அவைத் தலைவர் விடுதலை

Read Time:2 Minute, 39 Second

Muli_jaganatin1கடந்த புதன்கிழமை சுனாமி நிகழ்வின் ஏற்பாட்டு நாள் ஆகையால் அன்று இரவு 9.30 மணியளவில் ஆதரவாளர்களுடன் உரையாடிக் கொண்டிருந்த வடமாகாண சபை பிரதி அவைத் தலைவர் அன்ரனி ஜெகநாதன் மீது அரச கட்சி ஆதரவாளர்களின் குழு தாக்குதல் நடத்தியிருந்தனர்.

கடந்த புதன்கிழமை முல்லைத்தீவு சுனாமி நினைவாலயத்தின் முன்னால் சுனாமி நிகழ்வு தொடர்பில் ஏழு ஆதரவாளர்களுடன் கலந்துரையாடிக் கொண்டிருந்த வடமாகாண சபை பிரதி அவைத் தலைவர் அன்ரனி ஜெகநாதன் மற்றும் ஆதரவாளர்கள் மீது கடந்த வடமாகாண சபைத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் முல்லைத்தீவு மாவட்ட வேட்பாளராக போட்டியிட்ட அன்ரன் ஜெனிபட் உட்பட்ட ஆறு பேர் கொண்ட குண்டர் குழு தாக்குதல் நடத்தியிருந்தது.

நடத்திய பிற்பாடு அரச கட்சியின் ஆதரவாளர்கள், தம்மீது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வடமாகாண சபையின் பிரதி அவைத் தலைவர் அன்ரனி ஜெகநாதன் தலைமையிலான குழுவினர் தாக்குதல் நடத்தியதாக இராணுவத்தின் உதவியுடன் பொய் புகார் ஒன்றை பொலிசில் பதிவு செய்தனர்.

தாக்குதலுக்கு உள்ளான அன்ரனி ஜெகநாதன் உட்பட ஆதரவாளர்கள் தாக்குதலின் பாதிப்பால் முல்லைத்தீவு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதுடன் பொலிஸில் முறைப்பாடு பதிவு செய்தனர்.

இருவரின் முறைப்பாட்டின் அடிப்படையிலும் விசாரணை செய்ததுடன் அரச கட்சி ஆதரவாளர்களான அன்ரன் ஜெனிபட் மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வடமாகாண சபை பிரதி அவைத் அன்ரனி ஜெகநாதன் ஆகியோர்களை கைது செய்து விசாரணை செய்ததுடன் பொலிசார் பிணையில் செல்ல அனுமதித்துள்ளனர்.

அரச கட்சி ஆதரவாளர்கள் தாக்குதலுக்கு பயன்படுத்திய சில் பொருட்களையும் பொலிசார் கைப்பற்றியுள்ளதாக பொலிஸ் நிலையச் செய்திகள் தெரிவிக்கின்றன.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post 21 வயது இளைஞருக்கு எமனான சூதாட்டம்
Next post சகோதரியின் உதவியுடன், காதலியை கடத்தி பாலியல் துஷ்பிரயோகம் செய்த தம்பி