மாணிக்ககல் சுரங்கத்தில் சிக்கிய இருவரிடன் சடலங்கள் மீட்பு

Read Time:1 Minute, 16 Second

160484578deth-legs2இரத்தினபுரி, அங்கம்மன பிரதேசத்தில் மாணிக்ககல் அகழும் சுரங்கம் ஒன்றில் மண் சரிந்ததில் அதில் பணியாற்றிய இரண்டு தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளனர்.

மண்ணில் சிக்கியிருந்த தொழிலாளிகளின் சடலங்கள் இரத்தினபுரி பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளன.

இந்த விபத்துச் சம்பவம் நேற்றுமாலை 5.35 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

இவர்கள் இருவரது சடலங்களும் இன்றுஅதிகாலை 12.30 மணியளவில் மீட்கப்பட்டுள்ளன.

அங்கம்மன பிரதேசத்தைச் சேர்ந்த 39 வயதான ஒருவரும் லெல்லுப்பிட்டியவைச் சேர்ந்த 40 வயதான ஒருவருமே இந்த சம்பவத்தில் உயிரிழந்துள்ளனர்.

சுங்கத்தில் 30 அடி ஆழத்தில் தொழிலாளிகள் இருந்த போது சுரங்கம் உடைந்து மண் அவர்கள் மீது சரிந்துள்ளது.

சடலங்கள் இரத்தினபுரி வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ள அதேவேளை பிரேத பரிசோதனை இன்று (23) இடம்பெறவுள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பாகிஸ்தான் இலங்கைக்கு பாராட்டு
Next post நிலத்தினுள் புதைக்கப்பட்டிருந்த குழந்தையின் சடலம் மீட்பு