கவர்ச்சியில் கலங்கடிக்கும் ஆன்ட்ரியா! (அவ்வப்போது கிளாமர்)
மலையாளத்தில் இரு புதிய படங்களில் நடிக்கும் ஆன்ட்ரியா, இதுவரை இல்லாத அளவுக்கு கவர்ச்சியில் கலங்கடித்துள்ளாராம். கமலின் விஸ்வரூபம், சமீபத்தில் வந்த என்றென்றும் புன்னகை படங்களில் கவர்ச்சியாக நடித்திருந்தார் ஆன்ட்ரியா.
இப்போது மலையாளத்திலும் இரண்டு படங்களில் நடிக்கிறார். இந்த படங்களில் இதுவரை இல்லாத அளவுக்கு கவர்ச்சி காட்டுகிறாராம்.
இதுகுறித்து ஆன்ட்ரியா கூறுகையில், « என்றென்றும் புன்னகை படத்தில் எனக்கு நல்ல வேடம். பாராட்டுகள் குவிகிறது. மேலும் சில படங்களில் வலுவான கேரக்டர்களில் நடித்து வருகிறேன்.
கதைக்கு தேவை என்றால் கவர்ச்சியாக நடிப்பேன். சினிமாவுக்கு வந்த பிறகு இப்படித்தான் நடிப்பேன் என்று நிபந்தனை விதிப்பது சரியல்ல. அதே நேரம் ஆபாசமாக நடிக்கமாட்டேன். நல்ல கதைகளை தேர்வு செய்து நடிப்பது என்று முடிவு செய்துள்ளேன்.
மலையாளத்தில் கவர்ச்சியில் கலங்கடிக்கும் ஆன்ட்ரியா! ஆன்ட்ரியா கவர்ச்சிக்கு முன்னுரிமை கொடுத்து எடுக்கப்படும் படமாக இருந்தாலும் கூட எனக்குப் பிரச்சினை இல்லை. ஏற்றுக் கொள்வேன், » என்றார்.
Average Rating