ஆண் அனகொண்டாவை வாந்தியெடுத்த பெண் அனகொண்டா

Read Time:1 Minute, 17 Second

anakonda_001தெஹிவளை மிருகக்காட்சி சாலையில் இரண்டு நாட்களுக்கு முன்னர் ஆண் அனகொண்டாவை விழுங்கிய பெண் அனகொண்டா அந்த ஆண் அனகொண்டாவை வாந்தியெடுத்துவிட்டதாக மிருகக்காட்சி சாலை வட்டாரங்கள் தெரிவித்தன.

கடந்த 19 ஆம் திகதி வியாழக்கிழமையே பெண் அனகொண்டா, ஆண் அனகொண்டாவை விழுங்கியது. வாந்தி எடுத்ததன் பின்னர் அந்த பெண் அனகொண்டா மயங்கிவிழுந்து விட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

மரணமடைந்த நிலையிலிருக்கும் 9 அடி நீளமான ஆண் அனகொண்டாவின் தலையில் மட்டுமே காயங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

மயங்கிய நிலையிலிருக்கின்ற 10 அடி நீளமான பெண் அனகொண்டா மிருகக்காட்சி சாலை வைத்தியசாலையின் குளிரூட்டப்பட்ட அறையில் வைக்கப்பட்டுள்ளதாக மிருகக்காட்சி சாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post வைத்தியருக்கு விளக்கமறியல்..
Next post அரைகுறை ஆடை பார்ட்டி வீடியோ பூனம் பாண்டே அதிர்ச்சி