வெடிகுண்டு தொழிற்சாலை தகர்ப்பு: ஆப்கானிஸ்தானில் 85 தலிபான் தீவிரவாதிகள் சுட்டுக்கொலை

Read Time:1 Minute, 40 Second

Afganisthan.Flag.jpgஆப்கானிஸ்தானில் மறு சீரமைப்பு பணிகளில் ஈடுபட்டு வரும் மெரிக்க கூட்டு படையினரையும், வெளிநாட்டினரையும் தலிபான் தீவிரவாதிகள் தாக்கி வருகிறார். இந்த தீவிரவாதிகளை தடுக்க அமெரிக்க கூட்டு படையினர் தெற்கு பகுதியில் அதிரடி தாக்குதல் நடத்தினார்கள். தெற்கு பகுதியில் மலை அடி வாரங்களை ஒட்டியுள்ள 4 மாகாணங்களை 10 ஆயிரத் திற்கும் மேற்பட்ட அமெரிக்க படையினரும், ஆப்கான் ராணு வமும் சுற்றி வளைத்தது. தீவிரவாதிகளின் முகாம்கள், பதுங்கு குழிகள், ஆயுத கிடங் குகள் ஆகியவற்றை குண்டு விசி தாக்கியது. 4 நாட்களாக தொடர்ந்து இந்த தாக்குதல் நடைபெற்றது.

இந்த அதிரடி தாக்குதலில் 85 தலிபான் தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். தீவிரவாதி களின் வெடிகுண்டு தயா ரிப்பு தொழிற்சாலையும் தாக்கப்பட்டது. தலிபான் ஆட்சி அகற்றப்பட்ட பிறகு அமெரிக்க கூட்டணி படைகள் நடத்திய மிகப்பெரிய தாக்குதல் இது.

இதே போல் பல்வேறு நகரங்களில் போதை பொருள் களுக்கு எதிரான வேட்டையும் நடந்தது. இதில் பல கோடி ரூபாய் மதிப்புள்ள போதை பொருட்கள் சிக்கின.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post இத்தாலி இளவரசர் கைது
Next post -ஜூன் 19- தியாகிகள் தினம்