நடத்தையில் சந்தேகம்: பள்ளி ஆசிரியையை கொன்று உடலை 3 துண்டுகளாக்கி வீசிய கொடூரம்

Read Time:4 Minute, 4 Second

007திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்தவர் காந்திமதி (வயது 38), ஆசிரியை. இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த ஒருவருக்கும் திருமணம் ஆகி கருத்து வேறுபாடு ஏற்பட்டு விவாகரத்து பெற்றனர். அதன்பின்னர் காந்திமதி சென்னை வியாசர்பாடியை சேர்ந்த பரமசிவம் (40) என்பவரை கடந்த ஏப்ரல் மாதம் திருமணம் செய்தார். பரமசிவம் தனியார் கம்பெனியில் தலைமை கணக்காளராக வேலை செய்து வருகிறார்.

பணியிட மாறுதல் காரணமாக காந்திமதி பொன்னேரி அருகே உள்ள நெடும்பரம்பாக்கம் ஊராட்சி நடுநிலைப் பள்ளிக்கு மாறுதலாகி அங்கு வேலையில் சேர்ந்தார். 45 நாட்களுக்கு முன்னர் பொன்னேரி அருகே உள்ள காரனோடை பஜார் தெருவில் வாடகை வீட்டில் குடியேறினார்.

2 நாட்களாக பரமசிவத்திடம் இருந்து போன் வரவில்லை என்று சந்தேகப்பட்ட அவரது உறவினர்கள் காரனோடைக்கு வந்தனர். அப்போது அவரது வீடு பூட்டப்பட்டிருந்தது. இதனால் சந்தேகம் அடைந்த அவர்கள் வீட்டை திறந்து பார்த்தபோது குளியல் அறையில் எரிந்த நிலையில் இரு கால்கள் மட்டும் இருந்தது. இதுபற்றி அவர்கள் சோழவரம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

திருவள்ளூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சரவணன் உத்தரவின் பேரில், பொன்னேரி துணை சூப்பிரண்டு எட்வர்ட், இன்ஸ்பெக்டர்கள் பாலு, ரமேஷ், சிங்காரவேலு ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணையில் ஈடுபட்டனர். விசாரணையில் மனைவியை அடித்துக் கொலை செய்து 3 துண்டுகளாக்கியதை பரமசிவம் ஒப்புக்கொண்டார்.

இதைத்தொடர்ந்து போலீசார் பரமசிவத்தை கைது செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில், மனைவியின் நடத்தையில் சந்தேகம் அடைந்ததாலும், தன்னுடைய தாயாரை தரக்குறைவாக பேசியதாலும் கொலை செய்ததாக தெரிவித்தார்.

போலீசாரிடம் பரமசிவம் கூறும்போது, ”எங்கள் இருவருக்கும் இடையே கடந்த ஞாயிற்றுக்கிழமை தகராறு ஏற்பட்டது. அப்போது கோபத்தில் அவரை தாக்கியதில் அவர் இறந்து போனார். அதன் பின்னர் உடலை பெட்ரோல் ஊற்றி கொளுத்தினேன். பின்னர் உடலை 3 துண்டுகளாக அறுத்து ஒரு பகுதியை வீட்டில் வைத்துவிட்டு, இடுப்பு, கைகள் அடங்கிய மற்றொரு பகுதியை செம்புலிவரத்தில் உள்ள புதரில் வீசினேன். தலை பகுதியை சென்னை யானைக்கவுனி பாலத்தின் கீழ் வீசினேன்” என்றார்.

போலீசார் பரமசிவத்தை அழைத்துக் கொண்டு சென்னை யானைக்கவுனி பாலத்தின் கீழ் பிளாஸ்டிக் பையில் இருந்த தலையையும், செம்புலிவரத்தில் இருந்த உடல் பகுதியையும் மீட்டனர். வீட்டில் இருந்த கால் பகுதியையும் போலீசார் கைப்பற்றினர். துண்டுகளாக்கப்பட்ட 3 பகுதிகளையும் பிரேதபரிசோதனைக்காக பொன்னேரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து போலீசார் தொடர்ந்து தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post (VIDEO) கழுதை மேய்க்கிற பையனுக்கு, இவ்வளவு அறிவானு பொறாமை….
Next post தேவயானி கோப்ரகடேவை கைதுசெய்ய உத்தரவிட்ட இந்திய வம்சாவளி அதிகாரி: புதிய தகவல்