(PHOTOS) அழகுராணியின் கணினியை ஊடுருவி, நிர்வாணப்படங்களை பிடித்த இளைஞன்

Read Time:5 Minute, 26 Second

3409Thumஅமெரிக்காவில் 19 வயதுக்குட்பட்டோருக்கான ‘மிஸ் டீன் யூ.எஸ்.ஏ’ அழகுராணியாக தெரிவான காஸிடி வூல்வ் எனும் யுவதியின் நிர்வாணப் புகைப்படங்களை வைத்துக்கொண்டு பணம் கேட்டு மிரட்டிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட அவரின் முன்னாள் வகுப்பு மாணவனொருவன் அக்குற்றச்சாட்டுகளை நீதிமன்றத்தில் ஒப்புக்கொண்டுள்ளான்.

கலிபோர்னியா மாநிலத்தைச் சேர்ந்த காஸிடி வூல்வ், மிஸ் டீன் கலிபோர்னியா மாநில அழகு ராணியாகி அமெரிக்க தேசிய ரீதியிலான மிஸ் டீன் யூ.எஸ்.ஏ. அழகுராணியாகவும் கடந்த ஓகஸ்ட் மாதம் தெரிவானவர்.

அவரின் நிர்வாணப் புகைப்படங்கள் தம்வசம் இருப்பதாகவும் அவற்றை வெளியிடாமல் இருப்பதற்காகக் கூறிய ஒருவர், தனக்கு காஸிடியின் ‘தரமான நிர்வாணப் படங்களை’ அனுப்ப வேண்டும் எனக் கோரி ஒருவன் மிரட்டினான்.

ஆனால் அவர் மிரட்டல் விடுத்த நபருக்கு நிர்வாணப் புகைப்படங்களை வழங்காமல், இந்த மிரட்டல் குறித்து பொலிஸாருக்கு தகவல் வழங்கினார்.

இது தொடர்பாக தீவிரமாக ஆய்வுகளை மேற்கொண்ட எவ்.பி.ஐ. பொலிஸார் ஜெரார்ட் ஜேம்ஸ் ஆப்ரஹாம் என்பவனே இந்த மிரட்டலை விடுத்த நபர் என்பதை கண்டறிந்தனர்.

இவர் காஸிடி வூல்ப்பின் கல்லூரியில் ஒரேவகுப்பில் கல்வி கற்றவன் என்ற தகவல் பலருக்கும் அதிர்ச்சியளித்தது.

கணினி விஞ்ஞானத்துறை மாணவரான ரெரார்ட் ஜேம்ஸ் ஆப்ரஹாம் காஸிடியின் மடிக்கணினியை இணையத்தளம் மூலம் ஊடுருவி, அவர் அறையில் நடப்பவற்றை கண்காணித்து மடிக்கணினியிலுள்ள கமெரா மூலம் சில புகைப்படங்களை ஆப்ரஹாம் பதிவுசெய்திருந்தான்;.

அவற்றில் சில புகைப்படங்களை மின்னஞ்சல் மூலம் அவன் காஸிடிக்கு அனுப்பிய ஜெரார்ட், ‘நீ மொடல் அழகியாகுதற்கு கனவு காண்கிறாய், ஆனால் உன்னை ஆபாசப்பட நடிகையா மாறப்போகிறாய்’ எனவும் காஸிடியை மிரட்டியிருந்தான்.

அதேவேளை காஸிடியை மாத்திரமல்லாமல் மேலும் சுமார் 150 பேரின் கணினிகளை ஆப்ரஹாம் ஊடுருவி இதேபோன்ற மிரட்டல்களை விடுத்து அவர்களை தனது அடிமைகள் போன்று நடத்தியுள்ளமையும் பொலிஸாரால் கண்டறியப்பட்டது. கனடா, அயர்லாந்து போன்ற நாடுகளைச் சேர்ந்த பெண்களும் சிறுமிகளும் ஆப்ரஹாமினால் மிரட்டப்பட்டவர்களின் பட்டியலில் இருந்தனர்.

ஜெரார்ட் ஜேம்ஸ் ஆப்ராமை பொலிஸார் தேடி வந்த நிலையில் கடந்த செப்டெம்பர் மாத இறுதில் அவர் பொலிஸாரிடம் சரணடைந்தான். பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவர் கடும் நிபந்தனைகளுடன் 50,000 அமெரிக்க டொலர் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டான். வீட்டிலுள்ள கணினியில் கண்காணிப்பு மென்பொருளொன்றை தரவேற்றியபின் பாடசாலை வேலைகளுக்கு மாத்திரம் அதை பயன்படுத்தலாம், வேறு கணினிகளை பயன்படுத்தக்கூடாது எனவும் நீதிமன்றம் நிபந்தனை விதித்திருந்தது.

இது தொடர்பாக கலிபோர்னியாவிலுள்ள மாவட்ட நீதிமன்றமொன்றில் நடைபெற்று வந்த வழக்கு விசாரணையின்போது, காஸிடி வூல்ப் மற்றும் வேறு சில யுவதிகளின் கணினியை ஊடுருவி அவரின் நிர்வாண புகைப்படங்கள் சிலவற்றை பிடித்ததாக ஜெரார்ட் ஜேம்ஸ் ஆப்ரஹாம் ஒப்புக்கொண்டான்.

தான் கடந்த காலத்தில் மன உளைச்சலினால் பாதிக்கப்பட்டிருந்ததாகவும் அதற்காக சிகிச்சை பெற்றுக்கொண்டதாகவும் நீதிபதியிடம் ஜெரார்ட் ஆப்ரஹாம் தெரிவிவித்தான்.

எனினும் இதனால் ஜெரார்ட் ஆப்ரஹாமுக்கான தண்டனை குறையுமா எனத் தெரியவில்லை. சட்டத்தின்படி மேற்படி குற்றங்களுக்கு 11 வருடகாலம் வரையான சிறைத்தண்டனை விதிக்கப்பட முடியும். இந்நிலையில் ஜெரார்ட் ஆப்ரஹாமுக்கான தண்டனை குறித்து எதிர்வரும் மார்ச் மாதம் நீதிமன்றம் அறிவிக்கவுள்ளது.

3409usa
3409miss_teen_usa

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ரயிலின் முன் பாய்ந்து, 22 வயது இளம் பெண் தற்கொலை
Next post (PHOTOS) உறைய வைக்கும் குளிரில், உள்ளாடையுடன் அறப்பணி ஓட்டம்!