தந்தை கண்டித்ததால், சினேகா தூக்கிட்டு தற்கொலை

Read Time:1 Minute, 46 Second

sucide-006எந்நேரமும் ​தொலைபேசியில் பேசிக் கொண்டிருப்பதாக தந்தை கண்டித்ததால் மனமுடைந்த கல்லூரி மாணவி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

சென்னை, கிழக்கு முகப்பேர் பகுதியில் வசித்து வரும் முத்துக் குமார் என்பவரின் மகள் 18 வயது சினேகா. இவர் அண்ணாநகரில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் இரண்டாம் ஆண்டு பயின்று வருகிறார்.

கையில் தொலைபேசியுடன் எப்போதும் யாராவதுடனாவது பேசிக் கொண்டும், குறுஞ்செய்தி அனுப்பிக் கொண்டும் சினேகா இருந்ததாகச் சொல்லப்படுகிறது.

படிக்கிற வயதில் தொலைபேசியில் பேசி காலத்தை வீணடிக்காதே எனக் கண்டித்துள்ளார் அவரது தந்தை. இதனால், மனமுடைந்த சினேகா வீட்டில் யாருமற்ற வேளையில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ஜே ஜே நகர் பொலிஸார் சினேகாவின் உடலைக் கைப்பற்ரி பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்தனர்.

சினேகாவின் தற்கொலைக்கு தொலைபேசி மட்டும் தான் காரணமா அல்லது வேறு ஏதேனும் உள்ளதா என்றக் கோணத்தில் பொலிசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பொலிஸாரைக் கண்டதும் நிர்வாணமாக நடனமாடிய, தாயும் பிள்ளைகளும் கைது
Next post (VIDEO) பனியில் சிக்கிய காரை, தள்ளி நகர்த்த உதவிய ஜோர்தான் மன்னர் அப்துல்லா