பாப்பரசரின் தொப்பியை கழற்றிய பாலகன்!! (PHOTOS)

Read Time:2 Minute, 11 Second

3395_newsthumb_francisபுனித பாப்பரசர் முதலாம் பிரான்சிஸின் தொப்பியை பாலகன் ஒருவன் கழற்றி கையில் எடுத்த சம்பவம் நேற்றுமுன்தினம் இடம்பெற்றது.


எளிமைக்கும் சாதாரண மக்களுடன் அன்புடன் பழகுவதற்கும் பெயர் பெற்ற பாப்பரசர் முதலாம் பிரான்சிஸ், வசதி குறைந்த குடும்பங்களுக்கு உணவுப்பொருட்களையும் ஆடைகள் விளையாட்டுப் பொருட்களையும் வழங்கும் பைவமெனர்றில் கலந்து கொண்டார்.

வத்திகானில் நடைபெற்ற இந்நிகழ்வின்போது, குழந்தையொன்றை பாப்பரசர் தூக்கி மகிழ்ந்தார். அப்போது பாப்பரசரின் தொப்பியை அக்குழந்தை கழற்றி கையில் எடுத்தது. பின்னர் பாப்பரசர் அதை வாங்கி மீண்டும் அணிந்து கொண்டார்.


பாப்பரசர் முதலாம் பிரான்சிஸின் 77 ஆவது பிறந்த தினம் நாளை செவ்வாய்க்கிழமையாகும்.  அவர் பாப்பரசராக தெரிவாகுவதற்கு முன் கடந்த வருடம் அவரின் பிறந்த தினத்தன்று சிறார்கள் வழங்கிய சிறிய கேக்கை அவர் பெற்றுக்கொண்டு வியப்பளித்தார்.

டைம் சஞ்சிகையினால் இவ்வருடத்தின் சிறந்த மனிதராகவும் அவர் கடந்த வாரம் தெரிவுசெய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


ஆனால், பிரபலமாகுவதையோ, கௌவரங்களைப் பெறுவதையோ பாப்பரசர் நோக்கமாகக் கொண்டிருக்கவில்லை என வத்திகான் பேச்சாளரான அருட்தந்தை பிரெட்ரிகோ லொம்பார்டி கூறியுள்ளார்.

ஆனால் மேற்படி தெரிவானது அனைவருக்குமான இறைவனின் அன்பை பரவச்செய்வதற்கு உதவினால் பாப்பரசர் நிச்சயம் மகிழ்ச்சியடைவார் எனவும் அவர் தெரிவித்தார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post விடுதலைப் புலிகளுக்கு நஷ்ட ஈடு வழங்க முடியாது -கோத்தபய
Next post சிறீதரன் பேச்சு: உணர்ச்சி வயப்படுவதில் பிரயோசனம் இல்லை – விக்கினேஸ்வரன்