பொலிஸ் அதிகாரி கார் – ஆட்டோ விபத்தில் மூன்று இளைஞர்கள் பலி

Read Time:1 Minute, 50 Second

acci-treveel2புத்தளம் பிரிவின் பொலிஸ் அத்தியட்சகர் பயணித்த காரும் முச்சக்கர வண்டியொன்றும் மோதிக் கொண்டதில் முச்சக்கர வண்டியில் பயணித்த மூன்று இளைஞர்கள் உயிரிழந்துள்ளதாக முந்தல் பொலிஸார் தெரிவித்தனர்.

இன்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை இந்த விபத்து முந்தல் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புத்தளம் – கொழும்பு பிரதான வீதியின் மதுரங்குளி செம்பட்டை எனும் பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.

இவ்விபத்தில் மங்களஎளிய மரிச்சிக்கட்டு எனும் பிரதேசத்தைச் சேர்ந்த சிரிமால் மதுசங்க, அகில மதுஷான் மற்றும் திலான் மதுசங்க ஆகிய இளைஞர்கள் மூவரே உயிரிழந்தவர்களாவர்.

இவர்கள் மூவரும் ஒரே குடம்பத்தைச் சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்படுகின்றது. உயிரிழந்த இளைஞர்களது உடல்கள் பிரேத பரிசோதனைக்காக புத்தளம் தள வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

இவ்விபத்து இடம்பெற்ற சமயம் அப்பிரதேசத்தில் மழை பெய்து கொண்டிருந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இவ்விபத்துத் தொடர்பில் பொலிஸ் அத்தியட்சகரின் கார் சாரதி முந்தல் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். முந்தல் பொலிஸார் இவ்விபத்துத் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post இலங்கை அதிபர் ராஜபக்சேவின் சகோதரர் பசில் ராஜபக்‌சேவுக்கு புற்று நோய்!
Next post விசா மோசடி: கைதான இந்திய பெண் தூதருக்கு சலுகை கிடையாது- அமெரிக்கா திட்டவட்டம்