மனஅழுத்தத்தை கண்டறிவதற்காக, மைக்ரோசொபட் நிறுவனம் தயாரித்த பிரா..!

Read Time:2 Minute, 28 Second

3272Microsoft-கணினி உலகில் பல்வேறு தொழில் நுட்பங்களை புகுத்தும் மைக்ரோசொப்ட் நிறுவனம், மக்களின் மனநிலையை அளவிடுவிடும் மார்புக்கச்சையை (பிரா) வடிவமைத்து பெண்களின் உள்ளாடையிலும் தொழில்நுட்பத்தினை புகுத்தியுள்ளது.

கட்டுப்பாடற்றற உணவினால் ஏற்படும் மனஅழுத்தங்களைக் கண்டறிந்து தடுக்கும் நோக்கிலேயே தொழில்நுட்ப ரீதியான அணியக்கூடிய மார்ப்புக்கச்சைமைக்ரோசொப்ட் நிறுவனத்தின் ஆராய்ச்சியார்ளர் வடிவமைத்துள்ளனர்.

இந்த பிராவிலுள் உணரியானது (சென்ஸர்) இதயம் மற்றும் தோலின் செயற்பாடுகளை அவதானித்து மனநிலையின் அளவு தொடர்பான தகவல்களை வழங்கும். இத்தகவல்கள் ஸ்மார்ட்போன் எப்ஸ் இனூடாக வழங்கப்படும்.

இதற்காக பிராவில் இதயம் மற்றும் தோல் தொடர்பிலான தகவல்களை வழங்கும் உணரிகள் அதேபோன்று எக்ஸலரோமீற்றர் மற்றும் கிரோஸ்கோப் போன்றனவும் பதிக்கப்பட்டுள்ளன.

இது ஒரு தனித்துவமான மார்புக்கச்சை. ஏனெனில் இதனைக்கொண்டு இதயத்துடிப்பினை அளவிடவிட முடிகிறது. இந்த மார்புக்கச்சை போன்று ஆண்களுக்கான உள்ளாடை தயாரிக்கவும் முயற்சிக்கப்படுகிறது. ஆனால் இதயத்திலிருந்து அவை தூரத்திலுள்ளதால் திறன் குறைவாக உள்ளது என மைக்ரோசொப்ட் தெரிவித்துள்ளது.

‘சுமார் 6 மணித்தியாலங்கள் பெண்களில் இந்த மார்புக்கச்சையை சோதனை செய்து பார்த்ததில், பயனர்கள் இதனை அணிவதில் விருப்பம் குறைவாக இருந்தார்கள். ஏனெனில் 3 முதல் 4 மணித்தியாலங்களுக்கு ஒருமுறை இதனை சார்ஜ் செய்ய வேண்டி ஏற்படுகிறது’ என மைக்ரோசொப்ட் நிறுவனத்தில் சிரேஷ்ட ஆராய்ச்சி வடிவமைப்பாளர் அஸ்டா ரோஸ்வே தெரிவித்துள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post லண்டன் – துபாய் விமானத்தில் பயணி அட்டகாசம்!
Next post குழந்தையைப் பாதுகாக்கும் நாகபாம்புகள்: (அதிர்ச்சி வீடியோ)