குழிக்குள்ளிருந்து மீட்கப்பட்ட குட்டி யானை குடியிருப்பு பிரதேசத்துக்குள்..

Read Time:1 Minute, 48 Second

3284_newsthumb_Thumகருவலகஸ்வௌ நெல்லிவௌ நிக்க வௌ எனும் பிரதேசத்தில் குழியொன்றினுள் வீழ்ந்திருந்த மூன்று வயதான யானைக் குட்டியொன்றை வெளியில் எடுப்பதற்கு கருவலகஸ்வௌ வனவிலங்கு அலுவலக உத்தியோகத்தர்களும், கருவலகஸ்வௌ பொலிஸாரும் இணைந்து நடவடிக்கையினை மேற்கொண்டனர்.

இந்த யானைக் குட்டி கடந்த வெள்ளிக்கிழமை அதிகாலை 2 மணியளவில் அந்தப் பிரதேசத்திலிருந்த விவசாய நீர் பெறும் குழி ஒன்றினுள் வீழ்ந்திருந்துள்ளது.

இதனை அறிந்து கொண்டு குறித்த பிரதேசத்திற்குச் சென்ற பொலிஸாரும் வனவிலங்கு அலுவலக அதிகாரிகளும் இந்த யானையினை வெளியில் எடுப்பதற்கு நடவக்கை மேற்கொண்டனர்.

இந்நடவடிக்கைக்கு அப்பிரதேசத்தில் அபிவிருத்தித் திட்டப் பணியில் ஈடுபட்டிருந்த சீன நாட்டு பிரஜைகளும் தமது ஒத்துழைப்புக்களையும் கனரக வாகனங்களையும் வழங்கிச் செயற்பட்டனர்.

குறித்த யானைக்குட்டி வெளியேற்றப்பட்ட பின்னர் அங்கிருந்து குடியிருப்பு பகுதிக்குள் விரண்டோடி வந்ததுடன் அதனை வனவிலங்கு அதிகாரிகள் துப்பாக்கிப் பிரயோகத்தினை மேற்கொண்டு விரட்ட முயற்சித்தனர். பின்னர் குட்டி யானை காட்டுக்குள் விரண்டோடியது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post தென்னிலங்கை பேருந்து மீது கல்வீச்சு; பொதுமக்கள் மீது சிங்களவர் தாக்குதல்
Next post புத்தரின் உருவம் பதித்த கையுறைகள் விற்பனை: பிரித் ஓதியபின் முஸ்லிம் வர்த்தகரை மன்னிப்பு கோரச்செய்த பிக்குகள்