அமெரிக்காவில் கடும் பனிப்புயல் குளிரில் சுருண்டு 5 பேர் பலி; 1,000 விமானங்கள் ரத்து..!

Read Time:2 Minute, 50 Second

us_egalஅமெரிக்காவின் வடமேற்கு பகுதியில் கடும் பனிப்புயல் வீசியது. இதில் குளிரில் சுருண்டு 5 பேர் பலியானார்கள். 1,000–க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டன.

ஐரோப்பாவில் உள்ள இங்கிலாந்து, ஜெர்மனி, நெதர்லாந்து, போலந்து, சுவீடன் ஆகிய நாடுகளை கடந்த சில நாட்களாக புயல் தாக்கி பெரும் சேதம் விளைவித்து வருகிறது. இதற்கிடையில் அமெரிக்காவின் வடமேற்கு பகுதிகளில் பனிப்புயல் வீசியது.

இதில் டெக்சாஸ், சான் பிரான்சிஸ்கோ, மின்னிசோட்டா, விஸ்கான்சின் உள்பட பல பகுதிகளில் மழை பெய்வது போல பனி கடுமையாக கொட்டியது. சில இடங்களில் 2 அடி உயரத்துக்கு பனிகட்டிகள் குவிந்து கிடக்கிறது.

குறிப்பாக டெக்சாஸ் நகரம் பெரும் பாதிப்புக்குள்ளானது. குளிர் வாட்டி எடுப்பதால் மக்கள் வீடுகளிலேயே முடங்கி கிடந்தார்கள். இதனால் சாலைகள், கடைகள் வெறிச்சோடி கிடந்தன. இதனால் இது ‘கறுப்பு வெள்ளி’ என்றும் ‘ஐஸ் வெள்ளி’ என்றும் வர்ணித்தனர்.

பெரும்பாலான கடைகள், பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டது. மின்சாரம் இன்றி லட்சக்கணக்கான மக்கள் தவித்தார்கள்.

இந்த பனிப்புயலுக்கு சான் பிரான்சிஸ்கோவில் 4 பேரும், டல்லாஸ் அருகே கார் டிரைவர் ஒருவரும் பரிதாபமாக இறந்தனர். சான் பிரான்சிஸ்கோவில் பலியானவர்களில் 3 பேர் வீடு இல்லாத அனாதைகள் என்றும் எனவே குளிரை தாங்காமல் சுருண்டு உயிர் இழந்தனர் என்றும் அதிகாரிகள் கூறினர்.

மற்ற இருவர் கார் நிறுத்தும் இடங்களில் சுருண்டு விழுந்து செத்ததாக கூறினர்.

டல்லாஸ்–போர்ட் ஒர்த் சர்வதேச விமான நிலையத்தில் மட்டும் 1,000 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. டாக்சிகள், பஸ்கள், ரெயில்கள் குறைந்த எண்ணிக்கையிலேயே ஓடின. இதனால் விமான நிலையங்களில் பயணிகள் கூட்டம் அலைமோதியது.

இன்னும் சில நாட்கள் இந்த பனிப்புயல் நீடிக்கும் என கூறப்படுகிறது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post நெடுந்தீவை விட்டு நேற்று, ஈ.பி.டி.பி. முற்றாக வெளியேற்றம்
Next post சீரியலில் நடிக்க நமீதா மறுப்பு!