இலங்கையில் இவ்வாண்டில் 500 பேர் சுட்டுக்கொலை

Read Time:1 Minute, 25 Second

pistrol.Shootingஇலங்கையில் 2013ம் ஆண்டு துப்பாக்கி சூட்டுச் சம்பவத்தால் 500 பேர் கொலை செய்யப்பட்டுள்ளனர் என யாழ். மாவட்ட பொலிஸ் அத்தியட்சகர் தமயந்த விஜயசிறி தெரிவித்துள்ளார்.

யாழ். தலைமைப் பொலிஸ் நிலையத்தில் நடைபெற்ற வாராந்த பத்திரிகையாளர் சந்திப்பின் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

2012ம் ஆண்டு 700 பேரும், 2013ஆம் ஆண்டு 500 பேரும் கொலை துப்பாக்கிச் சூட்டில் கொலை செய்யப்பட்டுள்ளனர்.

முப்படைகளைத் தவிர்ந்த சட்டவிரோதமாக ஏனையவர்களிடம் இருக்கும் துப்பாக்கிகளைக் களைவதற்கு இம்மாதம் 15ஆம் திகதி வரை காலக்கேடு வழங்கப்பட்டுள்ளது.

குறித்த காலத்துக்குள் துப்பாக்கிகள் வைத்திருப்பவர்கள் தகுந்த அதிகாரிகளிடம் துப்பாக்கிகளைக் கையளிக்க வேண்டுமென்றும், அவ்வாறு துப்பாக்கிகள் கையளிக்காதவர்களுக்கு எதிராக அரசாங்கத்தினால் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post விபசார விடுதியில் கர்ப்பம் தரித்த எய்ட்ஸ் நோயாளி
Next post மண்டேலாவின் நல்லடக்கத்தில் பங்கேற்க அமெரிக்க அதிபர் பயணம்