நண்பர்களுக்கு ஆபாச படங்கள் காட்டியவர், பொலிஸாரால் கைது

Read Time:1 Minute, 38 Second

t.phone-001கையடக்கத் தொலைபேசியில் சேமிக்கப்பட்டிருந்த ஆபாசப் படங்களை தனது நண்பர்களுக்குக் காண்பித்துக் கொண்டிருந்ததாகச் சொல்லப்படும் இளைஞர் ஒருவரைக் கைது செய்துள்ளதாக கல்பிட்டி பொலிஸார் தெரிவித்தனர்.

கல்பிட்டி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தளுவை பிரதேசத்தைச் சேர்ந்த 21 வயதுடைய இளைஞர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டவராவார்.

சந்தேக நபரான இளைஞர் தனது கையடக்கத் தொலைபேசியில் ஆபாச படங்களைச் சேமித்து வைத்துக் கொண்டு அப்படங்களை தனது நண்பர்களுக்கு காட்டி வருவதாகக் கிடைத்த தகவல் ஒன்றினையடுத்து மேற்கொண்ட நடவடிக்கையின் போதே சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இவர் இப்படங்களைப் பாடசாலை மாணவர்களுக்கும் காண்பித்தாரா என்பது தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்திருப்பதாகப் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபரை அவர் உபயோகித்த கைடயக்கத் தொலைபேசியையும் புத்தளம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ள கல்பிட்டி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post கமலேந்திரன் ஈ.பி.டி.பி. கட்சியில் இருந்து இடைநிறுத்தம்..
Next post வரலாற்று நாயகன் நெல்சன் மண்டேலா காலமானார்