தாய், மகனுக்கு அடித்தது: ஜாக்பாட் 63 ரூபாய்க்கு, 2 டோயோட்டோ கார்..!

Read Time:3 Minute, 10 Second

car_of_the_year..அமெரிக்காவில், கருப்பு வெள்ளி (ப்ளாக் பிரைடே) கொண்டாட்டங்கள் வாடிக்கையாளர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. ப்ளாக் பிரைடே அன்று அமெரிக்காவில் பெரும்பாலான கடைகளில் தள்ளுபடி விலையில் ஏராளமான பொருட்கள் விற்கப்படுகின்றன.

அதன்படி ‘ஒரு அமெரிக்க டாலருக்கு (வெறும் 63 ரூபாய்க்கு) காரும் வாங்கலாம் என்று அறிவிப்பு வெளியானது. தென் மேற்கு ஹூஸ்டனில் உள்ள கார் டீலர் நிறுவனம் ஒன்று, ப்ளாக் பிரைடே தள்ளுபடி விற்பனைக்கு ஏற்பாடு செய்திருந்தது.

பிரபல ஸ்டெர்லிங் மெக்கால் டோயோட்டோ கார்கள் உள்ளிட்ட ஏராளமான கார்கள் அணி வகுத்து நிறுத்தப்பட்டிருந்தன. நமக்கு கிடைக்காதா என்ற ஆசையில், வாடிக்கையாளர்கள் இரவு பகலாக விற்பனை நடைபெறும் இடத்தில் வரிசை கட்டி நின்றனர்.

வாடிக்கையாளர்கள் பெயர் மற்றும் விருப்பமான காரின் விவரங்களை பதிவு செய்து விட்டு தங்களுக்கு விருப்பமான கார்களுக்கு அருகில் சென்று காத்திருந்தனர். ஒரே காருக்கு போட்டியிட்டவர்களின் எண்ணிக்கை 300க்கும் அதிகம் இருந்தது.

இந்நிலையில், அதிர்ஷ்டசாலிகள் தேர்வில் தாய் மற்றும் அவருடைய 15 வயது மகன் அனோக்வுரு இருவருக்கும் 2 கார்கள் கிடைத்தன. தேர்வு செய்யப்பட்டவுடன் நிறுவனத்தார் பெயர்களை அறிவித்தனர்.

பின்னர்தான் ஒரே குடும்பத்தில் உள்ளவர்களுக்கு 2 கார்கள் கிடைத்தது தெரிந்தது. இதை அறிந்து அங்கிருந்தவர்கள் கைதட்டி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

ஒரே கல்லில் 2 மாங்காய் கிடைத்த மகிழ்ச்சியில் அனோக்வுரு குடும்பத்தினர் உள்ளனர்.

இதுகுறித்து அனோக்வுரு கூறுகையில், கடவுளுக்கு எங்கள் மனமார்ந்த நன்றி. எனது மகிழ்ச்சியை வெளிப்படுத்த வார்த்தைகள் இல்லை. போட்டியில் எனக்கும் எனது தாய்க்கும் விரும்பிய கார் ஒரே ஒரு அமெரிக்க டாலருக்கு கிடைத்ததை நம்ப முடியவில்லை.

நாங்கள் எங்களுக்கு பிடித்த கார்களுக்கு பக்கத்தில் கடவுளை வேண்டியபடி அமர்ந்திருந்தோம் என்றான். பரிசு பெற்றவர்களுக்கு டோயோட்டோ மாடல் பழைய கார்கள் வழங்கப்பட உள்ளன என்பது குறிப்பிடத் தக்கது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post மனைவியின் உடலை துண்டு துண்டாக வெட்டி குளிர்சாதனப் பெட்டியில் வைத்த கணவர் கைது
Next post புலிகளை விமர்சிப்பதை விடுத்து, மாகாணசபைக்கு ஒத்துழையுங்கள் : சுரேஷ்