புலி­களின் நாண­யத்தின் மறு­பக்­க­மா­கவே த.தே.கூ. செயற்­ப­டு­கி­றது: கெஹ­லிய

Read Time:3 Minute, 53 Second

Tna-LtteTNAதமிழர் தாயகக் கொள்­கையை தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு இன்னும் கைவி­ட­வில்லை. அது தொடர்ந்­த­வண்­ணமே இருக்­கின்­றது.

அந்த வகையில் புலி­களின் நாண­யத்தின் மறு­பக்­க­மா­கவே தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு செயற்­பட்­டு­வ­ரு­கின்­றது என்று அமைச் சரவை பேச்­சா­ளரும் அமைச்­ச­ரு­மான கெஹ­லிய ரம்புக் வெல நேற்று சபையில் தெரி­வித்துள்ளார்.

பாரா­ளு­மன்­றத்தில் நேற்று செவ்­வாய்க்­கி­ழமை இடம்­பெற்ற 2014ஆம் ஆண்­டுக்­கான வரவு – செல­வுத்­திட்­டத்தில் சட்­டமும் ஒழுங்கும் பாது­காப்பு மற்றும் நகர அபி­வி­ருத்தி ஆகிய இரு அமைச்­சுக்­க­ளுக்­கான நிதியொதுக்­கீட்டு முன்­மொ­ழிவு தொடர்­பான குழு­நி­லையின் இரண்டாம் நாள் விவா­தத்தில் கலந்து பேசு­கை­யி­லேயே அவர் இதனை தெரி­வித்தார். அமைச்சர் கெஹ­லிய மேலும் கூறு­கையில்,

ஜனநாயகம், சுயா­தீ­ன­மான தேர்தல், புனர்­வாழ்வு மற்றும் மனித உ ரிமைகள் குறித்து பல்­வேறு விட­யங்கள் தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் தலைவர் இரா. சம்­பந்தன் இந்த சபையில் உரை­நி­கழ்த்­தி­யி­ருந்தார்.

அவ­ரது அனைத்து எடுத்­துக்­காட்­டல்­களும் வடக்கில் இருந்து இரா­ணு­வத்தை வெளி­யேற்றும் நோக்­கமே அடங்­கி­யி­ருந்­தது. சம்­பந்­தனைப் பொறுத்­த­வ­ரையில் அவ­ரது உரை­யா­னது புலம்­பெயர் தமி­ழர்­க­ளுக்­கா­கவே அமைந்­தி­ருந்­தது.

யுத்­தத்தில் புலிகள் தோற்­க­டிக்­கப்­பட்டு விட்ட போதிலும் நாண­யத்தின் இன்­னொரு பக்­க­மாக புலம்­பெ­யர்ந்தோர் இன்னும் செயற்­பட்டு வரு­கின்­றனர். அவற்றின் பிர­தி­ப­லிப்­பில்தான் ஐ.நா. மனத உரி­மைகள் உயர்ஸ்­தா­னிகர் நவ­நீ­தம்­பிள்ளை மற்றும் பிரித்­தா­னிய பிர­தமர் டேவிட் கமரூன் ஆகி­யோரின் செயற்­பா­டு­களும் அமைந்­தி­ருந்­தன.

மேலும் கூட்­ட­மைப்பின் சிறி­தரன் எம்.பி. புலி­களின் தலை­வரை போராட்ட வீர­ராக வர்­ணித்­தி­ருந்தார்.

கே.பி.யை தெரி­யாது என்று சம்­பந்தன் எம்.பி. கூறி­னாலும், பிர­பா­க­ர­னுக்கு ஆத­ர­வாக செயற்­ப­ட­வில்லை என்று அவரால் கூற­மு­டி­யாது. அப்­படி சொல்­வா­ரெனில் சிறி­தரன் எம்.பி. யின் உரையை அவர் வாபஸ் பெற­வேண்டும்.

மேலும் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்­பா­னது தமிழர் தாயகக் கொள்கையை இன்னும் கைவிட்­ட­தாக இல்லை. அது தொடர்ந்து கொண்­டுதான் இருக்­கின்­றது.

அந்த வகையில் பார்க்கும் போது புலி­களின் நாண­யத்தில் மறு­பக்­க­மா­கவே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இருக்கின்றது.

பாதுகாப்புப் படை இந்நாட்டுக்குப் பெற்றுக் கொடுத்த சுதந்திரமானது. தற்காலிக மானது என்பதையே இது சுட்டி நிற்கிறது. இதற்கு இடம்கொடுக்க முடியாது என்றார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post இறப்பதற்கு முன் பேஸ்புக்கில் எதிர்வுகூறிய பெண்..!
Next post வடமாகாணசபை எதிர் கட்சி தலைவர் கமலுக்கு, டிசம்பர் 17 ஆம் திகதி வரை விளக்கமறியல்…