மகளை வல்லுறவு செய்த, சிறிய தந்தையை கைது செய்ய நடவடிக்கை

Read Time:1 Minute, 48 Second

rape.Womenதனது மனைவியின் முதலாம் கணவரது பிள்ளையான 17 வயது சிறுமியை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திய சிறிய தந்தையை கைது செய்ய மாதம்பே பொலிஸார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

மாதம்பே – வெல்லவாகர பகுதியைச் சேர்ந்த சிறுமியே இவ்வாறு வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.

சிறுமிக்கு 2 வயது இருக்கும்போது தந்தை மரணமடைந்துவிட்டார். அதன் பின் தாய் இரண்டாம் திருமணம் செய்து கொண்டுள்ளார்.

இந்நிலையில் இரத்தினபுரி – கலவான பகுதியைச் சேர்ந்த தாயின் இரண்டாவது கணவர். சிறுமியின் அறைக்குள் சென்று அவரை கொலை செய்வதாக மிரட்டி பாலியல் வல்லுறவு புரிந்துள்ளதாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

முதல் சம்பவம் நடைபெற்ற வேளை தனது தாய் நோய்வாய்பட்ட நிலையில் வீட்டில் இருந்ததாக சிறுமி தெரிவித்துள்ளார்.

அதன்பின் தாய் வீட்டில் இல்லாத தருணங்களில் சிறிய தந்தை தன்னை வல்லுறவுக்கு உட்படுத்தியதாக சிறுமி பொலிஸாரிடம் கூறியுள்ளார்.

பாதிக்கப்பட்டதாகக் கூறப்படும் சிறுமி சிலாபம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மாதம்பே பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post குடிபோதையில் வீட்டைக் கொளுத்திய பெண் கைது
Next post இராணுவத்திலிருந்து தப்பிச் சென்று, ஆண் வேடமிட்டு மறைந்திருந்த இரு பெண்கள் கைது