விடுதலை புலிகள் தலைவர் பிரபாகரன் குடும்பம் இலங்கை கணிப்பீட்டில் இல்லை!

Read Time:3 Minute, 55 Second

ltte.piraba.famஇலங்கையில் யுத்தத்தினால் ஏற்பட்ட இழப்புகளின் விபரங்களை சேகரிக்கும் கணிப்பீட்டில், விடுதலை புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் வீடு சேர்த்து கொள்ளப்படாது என்று இலங்கை அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் நடந்த யுத்தத்தினால் ஏற்பட்ட உயிரிழப்புகள், மற்றும் அசையும், அசையா சொத்து இழப்புகளின் விபரங்களை சேகரிக்கும் பணி தற்போது தொடங்கியுள்ளது. இந்தப் பணி தொடர்பாக செய்தியாளர் மாநாடு ஒன்று கொழும்புவில் நடந்தது. அதில் கலந்துகொண்ட சென்சஸ் இலாகா டைரக்டர் ஜெனரல் டி.சி.ஏ குணவர்தனவிடம் கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கும்போதே, இந்த தகவலை அவர் தெரிவித்தார்.

டி.சி.ஏ குணவர்தன கூறுகையில், “பிரபாகரன் குடும்பத்தினருக்கு ஏதாவது இழப்புகள் ஏற்பட்டனவா என்ற விபரங்களை எமக்கு தெரிவிப்பதற்கு, பிரபாகரன் குடும்பத்தை சேர்ந்த யாருமே தற்போது உயிருடன் இல்லை. அதனால், அவரது குடும்பத்தை இந்த கணிப்பீட்டில் சேர்த்துக்கொள்ள முடியாதுள்ளது.

பிரபாகரனுக்கு இரு இடங்களில் வீடுகள் இருந்தன. யாழ்ப்பாணம் வல்வட்டித்துறையில் இருந்த வீட்டில் அவரது தந்தை வேலுப்பிள்ளை, மற்றும் தாயார் பார்வதி அம்மாள் வசித்தனர். 1980களிலேயே அவர்கள் அந்த வீட்டிலிருந்து கிளம்பி தமிழகம், திருச்சி நகருக்கு சென்றுவிட்டனர்.

மற்றைய வீடுகள் வன்னியில் விடுதலைப்புலிகள் கட்டுப்பாட்டில் சில பகுதிகள் இருந்தபோது இருந்தன. கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களில் இருந்த வீடுகளில், பிரபாகரன், அவரது மனைவி மதிவதனி, மகன்கள் சார்ள்ஸ் ஆன்டனி, பாலச்சந்திரன், மகள் துவாரகா ஆகியோர் வசித்தனர்.

2002-ம் ஆண்டு தொடங்கிய யுத்த நிறுத்த காலத்தில் பிரபாகரனின் பெற்றோர் திருச்சியில் இருந்து வந்தபோதிலும், யாழ்ப்பாணத்தில் உள்ள தமது பழைய வீட்டுக்கு செல்லவில்லை. வன்னியில் பிரபாகரனுடன் தங்கியிருந்தனர். பிரபாகரன் மற்றும் அவரது நேரடி குடும்பத்தினர் அனைவரும், விடுதலைப் புலிகளின் இறுதிப் போரில் உயிரிழந்தனர். யுத்தத்தின் பின், அவரது பெற்றோர்கள் இலங்கை அரசின் மருத்துவ உதவிகளை பெற்று சிறிதுகாலம் வாழ்ந்தபின், முதுமை காரணமாக உயிரிழந்தனர்.

இந்த நிலையில் பிரபாகரன் குடும்பத்தை சேர்ந்த யாருமே தற்போது இல்லை என்பதால், அவர்களுக்கு ஏற்பட்ட சேதம் பற்றிய தகவல் தற்போது எடுக்கப்படும் கணிப்பீட்டில் சேர்த்துக்கொள்ளப்பட முடியாதுள்ளது” என்று தெரிவித்தார்.

இலங்கை சென்சஸ் இலாகா டைரக்டர் ஜெனரல் டி.சி.ஏ குணவர்தனவுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தும் விதத்தில், சீமான் அல்லது நெடுமாறன் அய்யாவிடம் இருந்து ‘ஆச்சரிய’ தகவல் ஏதாவது கிடைக்குமோ!

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post சிறிதரன் எம்.பியின் புலிப்பாசமா? பொய்ப்பாசமா?? -வடபுலத்தான்
Next post (VIDEO) இலங்கையில் நடந்த யுத்தத்தின் ‘இறுத்திக்கட்டம்’ ஆவணப்படம்..!