(PHOTOS) அமெரிக்கர்களை பரவசப்படுத்திய 16 வகை பாரிய பலூன்கள்…
அமெரிக்கர்களை பரவசப்படுத்திய 16 வகை பாரிய பலூன்கள்..
வாஷிங்டன்: அமெரிக்காவின் நியூயோர்க் நகரில் இடம்பெற்ற வருடாந்த மெக்ஸியின் நன்றி தெரிவிப்பு தின அணிவகுப்பில் பலத்த காற்றுக்கு மத்தியிலும் பலவித உருவங்கள் கொண்ட 16 வகையான பாரிய பலூன்களும் பறக்கவிடப்பட்டன.
ஸ்பைடர் மான் ,ஸ்கூபி, ஸ்பொஞ்பொக் ஸ்வார் பான்ட் உட்பட பல பிரபல கற்பனை உருவங்களிலான பலூன்களும் இந்த அணிவகுப்பில் பறக்கவிடப்பட்டிருந்தன. இந்த அணிவகுப்பில் 3.5மில்லியன் பார்வையாளர்கள் பங்குபற்றியிருந்தனர். மேலும் 50 மில்லியன் பேர் இந்நிகழ்வினைத் தொலைக்காட்சி ஒளிபரப்பினூடாகக் கண்டு களித்தனர்.
அமெரிக்காவின் விடுமுறைக் காலத்தின்போது கடந்த வருடங்களில் வசந்த காலத்தினை வரவேற்கும் வகையிலே இந்த நன்றி தின நிகழ்வு அந்நாட்டவர்களால் கொண்டாடப்பட்டு வருகின்றது. 87 ஆவது வருடமாக இம்முறையும் நன்றி தின அணிவகுப்பு சிறப்பாக இடம்பெற்றுள்ளது.
முதல்நாள் கிழக்குக் கடலோரத்தைத் தாக்கிய புயல்காற்று மழையினால் பலூன்களைப் பறக்கவிட முடியாமல் போகுமோ என்று ஊர்வலத்தினர் காத்திருந்தபோது நியூயோர்க் கரையோர பாதுகாப்பு பிரிவினர் வானிலை அமைதியான சூழலில் காணப்படுவதாகக் கூறி பலூன்களைப் பறக்கவிட அனுமதியளித்தனர்.
இதனால் உயரப்பறந்த பலூன்களுக்கு இணையாக மக்களின் உற்சாகமும் அதிகரித்துக் காணப்பட்டது. தொடர்ந்து 87 வருடங்களாக நடைபெறும் இந்த அணிவகுப்பில் 1971 ஆம் ஆண்டு மட்டும்தான் மோசமான வானிலையினால் பலூன்கள் பறக்கவிடுவது தடை செய்யப்பட்டது.
பின்னர் 1997ஆம் ஆண்டின் அணிவகுப்பின்போது பூனை ஒன்று தொப்பியின்மீது அமர்ந்திருப்பதைப் போன்ற வடிவில் பறந்த பலூன் ஒன்று காற்றினால் விளக்குக் கம்பத்தில் உரசியபோது ஏற்பட்ட விபத்தில் பார்வையாளர் ஒருவர் கடுமையாகப் பாதிக்கப்பட்டார். இதனையடுத்து இந்த பலூன்கள் பறக்கவிடுவது குறித்து கடுமையான விதிகள் விதிக்கப்பட்டன.
இம்முறையும் கோனிக் ஹெட்ஜ்ஹாக் வடிவ பலூன் ஒரு மரத்தில் மாட்டிக்கொண்டு பின்னர் விடுவிக்கப்பட்டதாக பார்வையாளர்கள் தெரிவித்துள்ளனர். ஆயிரக்கணக்கான மக்கள் ஒன்றுகூடி மகிழ்ச்சியுடன் கொண்டாடுவதைப் பார்ப்பதே பரவசமான அனுபவமாக இருப்பதாக பார்வையாளர்கள் கூறினர்.
Average Rating