மதுபோதையில் வந்து மனைவி, பிள்ளைகளை துன்புறுத்தியவருக்கு விசித்திரமான தண்டனை

Read Time:1 Minute, 49 Second

attack-05மது­போ­தையில் தனது மனைவி, குழந்­தை­களை துன்­பு­றுத்தும் கண­வ­னுக்கு குரு­நாகல் நீதி­மன்­றத்தில் நேற்று விசித்­தி­ர­மான ஒரு தண்­டனை வழங்­கப்­பட்­டுள்­ளது.

இந்த நபர் மது­போ­தையில் வீடு வந்து குடும்ப அங்­கத்­த­வர்­களை துன்­பு­றுத்­து­வ­தாக வீரப்­பு­கெ­தர பொலிஸார்இ குரு­நாகல் நீதி­மன்ற நீதிவான் ரவீந்­திர பிரே­ம­ரட்­ன­விடம் முறைப்­பாடு செய்­தனர்.

முறைப்­பாட்டை விசா­ரித்த நீதவான், குறித்த நப­ருக்கு தண்­டனை வழங்­கியோ அல்­லது சிறைக்கு அனுப்­பியோ திருத்த முடி­யாது. சம்­பந்­தப்­பட்­ட­வ­ரது துன்புறுத்­தலைத் தடுக்க ஒரே வழி சம்­பந்­தப்­பட்­ட­வரை பொலீஸில் தடுத்து வைப்­ப­தாகும்.

எனவே தினமும் மாலை 5 மணி­யி­லி­ருந்து 8.30 மணி­வரை வீரப்­பு­கெ­தர பொலிஸ் நிலை­யத்­திற்கு வந்து கையெ­ழுத்­திட்டு அங்கு தங்­கி­யி­ருந்து பின்னர் வீடு செல்ல முடியும் என நீதவான் தெரி­வித்தார்.

அத்­துடன் சந்­தேகநப­ருக்கு 2500 ரூபா பிணை வழங்­கி­ய­துடன் மேற்­படி உத்­த­ரவு மீறப்­படின் கடும் தண்­டனை வழங்­கப்­ப­டும் என்றும் குறிப்­பிட்ட கால இடை­வெளி வரை இவ்வாறு நடத்தை அவதானிக்கப்பட்டு பின்னர் மீள் பரிசீலிக்கும்படும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post இளம்பெண் பெற்றெடுத்த 6 கிலோ எடை குழந்தை
Next post நண்பனுடன் குடும்பம் நடத்திய மனைவி..:, தனக்கும் மகனுக்கும் தீயிட முயற்சித்த நபர்