சிம்புவுடன் காதல் முறிவு – கவலைப்படாத ஹன்சிகா
சிம்புவுடன் காதல் முறிந்துவிட்டதாக வந்த தகவல்பற்றி ஹன்சிகா கவலைப்படாமல் ஷூட்டிங்கில் பிஸியாக இருக்கிறார்.
வாலு படத்தில் சிம்புவுடன் ஹன்சிகா ஜோடியாக நடித்திருக்கிறார்.
அப்போது இருவருக்கும் காதல் மலர்ந்தது. தங்கள் காதலை வெளிப்படையாக இணைய தளத்தில் அறிவித்தனர். அதன்பிறகு இரவு பார்ட்டியில் ஜோடியாக பங்கேற்றனர்.
இந்நிலையில் பசங்க பட இயக்குனர் பாண்டிராஜ் இயக்கும் புதிய படத்தில் சிம்பு நடிக்க ஒப்புக்கொண்டிருக்கிறார். இதில் சிம்புவுக்கு ஜோடியாக நடிக்க அவரது மாஜி காதலி நயன்தாரா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இதையடுத்து ஹன்சிகா, சிம்பு காதல் முறிந்துவிட்டதாக தகவல் வெளியானது. இதுபற்றி சிம்புவிடம் கருத்து கேட்டபோது,ஆளைவிடுங்க என்று நழுவிவிட்டார். ஹன்சிகா மட்டும் மனதளவில் பாதிக்கப்பட்டிருப்பதாக கூறப்பட்டது.
ஆனால் ஹன்சிகா வழக்கம்போல் ஜாலியாகவே ஷூட்டிங்கில் பங்கேற்று வருவதாக கூறப்படுகிறது. சிவகார்த்திகேயனுடன் மான் கராத்தே படத்தில் ஜோடியாக நடிக்கிறார் ஹன்சிகா.
இதன் ஷூட்டிங் புதுச்சேரியில் சமீபத்தில் நடந்தது. சிவகார்த்திகேயனுடன் ஹன்சிகா நடித்த டூயட் காட்சி படமாக்கப்பட்டது. வழக்கத்தைவிட உற்சாகமாக இக்காட்சியில் ஹன்சிகா நடித்ததாக பட குழுவினர் தெரிவித்தனர்.
இதுகுறித்து சிவகார்த்திகேயன் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள தகவலில், மான் கராத்தே படத்தின் பாடல் காட்சியில் ஹன்சிகாவுடன் ஷூட்டிங்கில் பங்கேற்றேன்.
எதிர்நீச்சல் படத்துக்காக இங்கு ஏற்கனவே ஷூட்டிங்கில் பங்கேற்றிருக்கிறேன். அனிரூத்தின் செம பாட்டுக்கு ஹன்சிகாவுடன் புதுவையில் நடித்து வருகிறேன் என குறிப்பிட்டிருக்கிறார்.
More Stories
மன இறுக்கம் குறைக்கும் கலை! (அவ்வப்போது கிளாமர்)
உனது ஆடையையும்எனது ஆடையையும்அருகருகே காய வைத்திருக்கிறாயேஇரண்டும்காய்வதை விட்டுவிட்டுவிளையாடிக் கொண்டிருப்பதைப் பார்! – தபூ சங்கர் கோபியும் சந்தியாவும் புதிதாகத் திருமணம் செய்து கொண்டவர்கள். பன்னாட்டு நிறுவனங்களில் பணிபுரிபவர்கள்....
நீ பாதி நான் பாதி!! (அவ்வப்போது கிளாமர்)
முடியாத தவம்என்னைக் குத்திக் கிளறும்வன்மம் மிகுந்த உன் அழகைஎப்படியடி பொறுத்துக் கொள்வேன்இரு கண்களையும்இறுக மூடி… – நா.வே.அருள் செந்தில்நாதன் பிசினஸ்மேன். அவருக்கு கல்லூரியில் படிக்கும் மகனும் மகளும்...
செக்ஸ் வேண்டாம்… செல்போனே போதும்!! (அவ்வப்போது கிளாமர்)
இன்று மொபைல் போன் மோகம் வயது வித்தியாசமில்லாமல் அனைவரையும் ஆட்டி வைக்கிறது என்பது நாம் அறிந்த ஒன்றுதான். ஒரு நிமிடம் கூட கையில் மொபைல் இல்லாமல் பெரும்பாலானோரால்...
பாலியல் உறவாலும் டெங்கு பரவும்?! (அவ்வப்போது கிளாமர்)
முறையற்ற பாலியல் உறவால் எய்ட்ஸ் போன்ற நோய்கள் பரவும் என்பதைக் கேள்விப்பட்டிருப்போம். தற்போது டெங்கு காய்ச்சலும் பரவும் என்பதை ஸ்பெயின் நாட்டு ஆய்வாளர்கள் உறுதிப்படுத்தியிருக்கிறார்கள். டெங்கு காய்ச்சலை...
போர்னோகிராபியை பற்றி பெண்கள் என்ன நினைக்கிறார்கள்?! (அவ்வப்போது கிளாமர்)
ஆண்கள் காட்சித்தூண்டுதலுக்கு ஆட்படுகிறவர்கள். அதனால்தான் ஒரு பெண்ணைப் பார்த்த உடனே காதலில் விழுகிறார்கள். ஆனால், பெண்கள் அப்படி காட்சித்தூண்டலுக்கு ஆட்படுகிறவர்கள் அல்ல. அதன் பின்னிருக்கும் காரண, காரியங்களை...
காதலிக்க நேரமில்லை!! (அவ்வப்போது கிளாமர்)
திருமணத்தின் மிக முக்கிய அம்சமான தாம்பத்ய உறவு என்ற ஒன்றே இல்லாமல் பெரும்பாலான தம்பதிகள் வாழ்ந்து வருவதாகக் கூறி கலவரப்படுத்துகிறது சமீபத்திய புதிய மருத்துவ ஆய்வறிக்கைகள். இதற்கு...
Average Rating