புலிகளுக்கு ஆதரவு வழங்குபவர்கள் தண்டிக்கப்படுவர் -கோடாபய

Read Time:2 Minute, 0 Second

gotta-cartoonபுலிகள் இயக்கமானது தடை செய்யப்பட்ட பயங்கரவாத அமைப்பாகும். இதற்கு ஆதரவு தெரிவிப்பர்களுக்கு நாம் சட்டப்படியாக நடவடிக்கை எடுப்போம். பயங்கரவாதிகளுக்காக முன்வருபவர்கள் பயங்கரவாதியாகவே கருதப்படுவார் என பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோடாபயராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

உள்ளூராட்சி சபை உறுப்பினர்களுக்கு புலிகளின் கல்லறைகள் மீண்டும் அமைக்க வேண்டும் என்பது தொடர்பாகவோ அல்லது பிரபாகரன் பற்றியோ பேசுவதற்கு எந்த அதிகாரமும் இல்லை.

உள்ளூராட்சி மன்ற அரச உறுப்பினர்கள் மக்களுக்கு சேவை செய்யவே தெரிவு செய்யப்பட்டுள்ளனர். கல்லறைகள் அமைப்பதானது மக்களுக்கான சேவை இல்லை.அது தேவையற்றது.அதனை நாங்கள் ஒரு போதும் அனுமதிக்கமாட்டோம்.அவற்றை நாம் இலகுவாக அகற்றி விடுவோம்.

நாங்கள் 30 வருடங்களாக துயரப்பட்டுவிட்டோம். இனி ஒருபோதும் அதற்கான சந்தர்ப்பத்தை வழங்க மாட்டோம். காணிகளை பற்றி குறிப்பிடுவதானால், இராணுவமுகாம்கள் எமது காணிகளில் அமைக்கப்பட்டுள்ளது.

அவற்றில் அதிகமானவை அரச காணிகளாகும்.இராணுவத்திற்கு தேவையான இடங்களை அமெரிக்காவோ இங்கிலாந்தோ அல்லது வடக்கின் முதலமைச்சரோ தீர்மானிக்க முடியாது.

அதனை தீர்மானிக்க வேண்டியவர்கள் ஜனாதிபதி, பாதுகாப்புச் செயலாளர் அல்லது முப்படைத்தளபதிகள் மட்டுமே என கோடாபயராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post கணவரது சடலத்திற்கு அருகில் ஒரு வருட காலம் உறங்கிய பெண்
Next post தவறுதலாக சிறிய விமான நிலையத்தில் தரையிறங்கிய ஜம்போ ஜெட்