லண்டன் தேம்ஸ் நதியில் மிதக்கும் விமான நிலையம்

Read Time:3 Minute, 37 Second

Tamil-Daily-News_19678461552லண்டனின் தேம்ஸ் நதியில் 4.7 லட்சம் கோடியில் மிதக்கும் விமான நிலையத்தை அமைக்க பிரிட்டன் திட்டமிட்டுள்ளது.

இன்றைய நவீன உலகம் மிகவும் சுருங்கிவிட்டது. காலையில் ஜப்பானில் காபி குடித்துவிட்டு மாலையில் நியூயார்க்கில் டிபன் சாப்பிடும் காலம் இது.

உலகின் மூலை முடுக்குக்கெல்லாம் விமான சேவை இயக்கப்படுகிறது. பரபரப்பான உலகில் போக்குவரத்துக்கு விமானத்தை பயன்படுத்தும் மக்களின் எண்ணிக்கை கடந்த 10 ஆண்டுகளில் ஏறக்குறைய இரு மடங்காக அதிகரித்துள்ளது.

இங்கிலாந்தை பொருத்தவரையில் கடந்த 2002ம் ஆண்டில் 7.23 கோடி பேர் விமானத்தில் பயணம் செய்துள்ளனர். ஆனால் கடந்த ஆண்டில் மட்டும் 11.5 கோடி பேர் விமானத்தை பயன்படுத்தியுள்ளனர். இது 60 சதவீதத்துக்கும் அதிகமாகும்.

இது அடுத்த 15 ஆண்டுகளில் மிகவும் அதிகரிக்கும் என்று இங்கிலாந்து போக்குவரத்துத் துறை கணக்கிட்டுள்ளது.

பிஸியான விமான நிலையங்களில் லண்டனின் ஹீத்ரு விமான நிலையம் உலகிலேயே 4வது இடத்தை பிடிக்கிறது. வருகிற 2030ம் ஆண்டில் விமானத்தை பயன்படுத்தும் மக்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப விமான நிலையங்களை விரிவுபடுத்துவது குறித்து இங்கிலாந்து போக்குவரத்துத் துறை ஆலோசித்து வருகிறது.

ஹீத்ரு விமான நிலையத்தில் 3வது ஓடுதளத்தை ஏற்படுத்துவதற்கே ஏராளமான கிராமங்களை முற்றிலும் அழிக்க வேண்டும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது. எனவே மாற்று ஏற்பாடுகள் குறித்து அதிகாரிகள் ஆலோசித்து வருகின்றனர்.

இதன் ஒரு பகுதியாக புகழ்பெற்ற தேம்ஸ் நதியில் மிதக்கும் விமான நிலையத்தை அமைப்பது குறித்து தேம்ஸ் நதி ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் போக்குவரத்துத் துறைக்கு அறிக்கை அளித்துள்ளது.

இதற்காக மாதிரி விமான நிலையத்தை அந்த நிறுவனம் உருவாக்கியுள்ளது.எதிர்கால தேவையை கருத்தில் கொண்டு படிப்படியாக விமான நிலையத்தை விரிவுபடுத்துவதற்கும் தேவையான ஆலோசனைகளை அந்த நிறுவனம் தனது அறிக்கையில் கூறியுள்ளது.

பிரிட்டானியா என்று பெயரிடப்பட்டுள்ள இந்த விமான நிலையத்தை உருவாக்க ரூ.4.7 லட்சம் கோடி செலவாகும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

லண்டனுக்கு கிழக்கே 75 கிலோ மீட்டர் தொலைவில் அமைய உள்ள இந்த புதிய விமான நிலையத்தின் மூலம் 2 லட்சம் பேருக்கு புதிதாக வேலைவாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post (VIDEO) பெங்களூரில் ஏ.டி.எம்.மில் பெண் அதிகாரியை அரிவாளால் வெட்டி பணம் கொள்ளை
Next post அசாத் சாலியின் தங்கையை கைது செய்ய உத்தரவு