அமெரிக்காவில் 3 இசைக் கலைஞர்களை சுட்டு கொன்று தற்கொலை செய்த நபர்

Read Time:1 Minute, 42 Second

7663a46e-c4c7-409d-bb03-c16aa7859cef_S_secvpfஅமெரிக்காவில் 3 இசைக்கலைஞர்களை சுட்டுக்கொன்ற நபர் தானும் தற்கொலை செய்து கொண்டார்.

அமெரிக்காவின் நியூயார்க்கில் உள்ள புரூக்ளினில் ஒரு பேண்ட் இசைக்குழு உள்ளது. இதில் பணியாற்றியவர்களில் ஒருவர் பணியில் இருந்து நீக்கப்பட்டார்.

இதனால் அந்த நபர் ஆத்திரம் அடைந்தார். சம்பவத்தன்று நள்ளிரவு அவர் இசைக்கலைஞர்கள் தங்கியிருந்த தொழிற்பேட்டை அருகே கிழக்கு வில்லியம்ஸ் பர்க்கில் உள்ள அடுக்குமாடி குடியிருப்புக்கு சென்றார்.

அப்போது, இசைக் கலைஞர்கள் நன்றாக அயர்ந்து தூங்கி கொண்டிருந்தனர். அவர்களை பார்த்ததும் ஆத்திரம் அடைந்த நபர் தூங்கி கொண்டிருந்த இசைக்கலைஞர்கள் மீது துப்பாக்கியால் சரமாரியாக சுட்டார்.

அதில் 3 பேர் குண்டு பாய்ந்து அதே இடத்தில் பரிதாபமாக இறந்தனர். ஒருவரது தோளில் குண்டு காயம் ஏற்பட்டது. உடனே அவர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

இதற்கிடையே, 3 பேரை சுட்டுக்கொன்ற அந்த இசைக்கலைஞர் தனக்கு தானே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார். இச்சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post “மண­மகள் தேவை” விளம்­பர மோசடி: கேகாலை நப­ரிடம் சிக்­கிய ஆசி­ரியை!
Next post தென்ஆப்பிரிக்காவில் லாரி– பஸ் மோதலில் 29 பேர் பலி