விபத்தில் இளம் ஜோடி உயிரிழப்பு

Read Time:1 Minute, 36 Second

443922948616850148motorbike_accident1கொட்டதெனியாவ பொலிஸ் பிரிவில் திவுலபிட்டி – கித்துல்வல பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர்.

இவ்விபத்து இன்றுகாலை 11 மணியளவில் இடம்பெற்றதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

மீரிகமவில் இருந்து திவுலபிட்டி சென்ற லொறி எதிர் திசையில் வந்த மோட்டார் சைக்கிளுடன் மோதியதில் மோட்டார் சைக்கிளில் பயணித்த திருமணமான இளம் ஜோடி உயிரிழந்துள்ளது.

விபத்தில் படுகாயமடைந்த இருவரும் திவுலபிட்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின் உயிரிழந்துள்ளனர்.

20 வயதுடைய நாமல் புஸ்பகுமார மற்றும் 19 வயதுடைய உசானி விதுசானி ஆகியோரே விபத்தில் உயிரிழந்துள்ளனர்.

சடலங்கள் திவுலபிட்டி மற்றும் வத்துபிட்டிவல வைத்தியசாலைகளில் வைக்கப்பட்டுள்ளன.

விபத்துடன் தொடர்புடைய லொறி சாரதி கைது செய்யப்பட்டுள்ள நிலையில் இன்று மினுவாங்கொட நீதிமன்றில் ஆஜர் செய்யப்படவுள்ளனர்.

கொட்டதெனியாவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post 1200 பேர் பலி : எதிர்பார்த்ததை விட வேகமாக வீசிய ஆண்டின் சக்திவாய்ந்த ஹையான் சூறாவளி
Next post மாநாட்டில் பங்கேற்பதில் மாற்றமில்லை