1200 பேர் பலி : எதிர்பார்த்ததை விட வேகமாக வீசிய ஆண்டின் சக்திவாய்ந்த ஹையான் சூறாவளி

Read Time:1 Minute, 38 Second

2892Haiyanபிலிப்பைன்ஸ் நாட்டில் நேற்று தாக்கிய ஹையான் சூறாவளியினால் 1200 பேர் பலியாகியுள்ளதுடன் மில்லியன் கணக்கான மக்கள் பாதிப்படைந்துள்ளனர்.

பிலிப்பைன்ஸ் நாட்டின் மத்திய பகுதியிலுள்ள சமர் தீவு அருகே ஹையான் சூறாவளி உருவாகி மத்தி பகுதியைக் கடந்து சென்றது. மணிக்கு 235 முதல் 275 கிலோ மீற்றர் வேகத்தில் நேற்று கரையைக் கடக்கும் என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்திருந்தது.

இந்நிலையில் பிலிப்பைன்ஸின் மத்திய பகுதியில் தீவிரமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. பல இலட்சம் மக்கள் பாதுகாப்பான இடங்களில் மீள்குடியமர்த்தப்பட்டனர்.

ஆனால் எதிர்பார்க்கப்பட்டதனை விட வேகமாக மணிக்கு 315 கி.மீற்றர் வேகத்தில் ஹையான் சூறாவளி நேற்று காலை தாக்கியுள்ளது. இவ்வாண்டின் சக்திவாய்ந்த ஹையான் சூறாவளியானது இதுவரையில் கணக்கிடப்பட்ட சூறாவளிகளில் சக்திவாய்ந்தது எனவும் கூறப்படுகிறது.

இச்சூறாவளியில் 1200 பேர் பலியாகியுள்ளதுடன் மில்லியன் கணக்கான மக்கள் பாதிப்படைந்துள்ளனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ‘நடிகை ஜியா கானுக்கு நெருக்கமான ஒருவரே அவரை கொலை செய்தார்..
Next post விபத்தில் இளம் ஜோடி உயிரிழப்பு