பெரு நாட்டில் 1000 ஆண்டு பழமையான மம்மிகள் கண்டுபிடிப்பு!

Read Time:1 Minute, 53 Second

41a30b57-4a2a-4b87-9b84-d9454037d84b_S_secvpfபெரு நாட்டில் 1000 ஆண்டு பழமையான மம்மிகள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளன.

தென் அமெரிக்க கண்டத்தில் உள்ள பெரு நாட்டின் தலைநகர் லிமாவின் புறநகர் பகுதியில் ஒரு வழிபாட்டு தலம் உள்ளது. இங்கு 2.5 ஹெக்டேர் நிலப்பரப்பில் பழங்கால கல்லறை தோட்டம் உள்ளது.

இங்கு கடந்த 1981–ம் ஆண்டில் இருந்து அகழ்வாராய்ச்சி பணியில் நிபுணர்கள் ஈடுபட்டு வருகின்றனர். அங்குள்ள பல கல்லறைகளை தோண்டி ஆய்வு நடத்துகின்றனர்.

இந்த நிலையில் சமீபத்தில் கல்லறைக்குள் 2 மம்மிகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதில், ஒருவர் பெரியவர் உடல் மற்றொன்று ஒரு குழந்தையின் உடலாகும்.

அவை 1000 ஆண்டுக்கு முந்தைய பழமையானது என கண்டறியப்பட்டுள்ளது. அவை இரண்டும் குந்தி உட்கார்ந்த நிலையில் உள்ளன. பெரியவர் இறந்த பின்னர் குழந்தையை கடவுளுக்கு பலி கொடுத்து புதைத்து இருக்கலாம் என கருதப்படுகிறது.

இந்த மம்மிக்களுடன் கினியா நாட்டு பன்றிகள் வேலைப்பாடு மிக்க ஜாடிகளில் வைத்து புதைக்கப்பட்டிருந்தன. அவற்றின் எலும்புகள் ஜாடிக்குள் இருந்தன.

கடந்த 2010–ம் ஆண்டில் ஒரு பெண் மற்றும் 4 குழந்தைகளின் எலும்பு கூடுகளும், ஒரு இளம் பெண்ணின் எலும்பு கூடுகளும் இருந்ததை அகழ்வாராய்ச்சி நிபுணர்கள் கண்டுபிடித்தனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post மெக்சிகோவில் தொழிற்சாலையில் பாய்லர் வெடித்தது ஒருவர் பலி: 100 பேர் காயம்!
Next post (VIDEO) விக்ரம் பிரபு நடிக்கும் ‘இவன் வேற மாதிரி’ – ட்ரெய்லர்