இலங்கைக்கு கடுமையான செய்தியை வழங்குவோம்; -பிரித்தானியா

Read Time:2 Minute, 8 Second

UK‑sri‑lanka‑flagஇலங்கையின் மனித உரிமைகள் நிலையின் முன்னேற்றம் குறித்து கேள்வி எழுப்புவதற்கான வாய்ப்பாக, பொதுநலவாய மாநாட்டை, பயன்படுத்திக் கொள்ள பிரித்தானியா திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

பிரித்தானிய நாடாளுமன்றத்தின் பிரபுக்கள் சபையில், வெளிவிவகார பணியகத்துக்கான மூத்த இணை அமைச்சர் சயீடா வர்சி இந்தத் தகவலை வெளியிட்டுள்ளார்.

கொமன்வெல்த் மாநாட்டை பிரித்தானியா புறக்கணிப்பதன் மூலம், மனிதஉரிமை மீறல் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளாகியுள்ள சிறிலங்காவுக்கு கடுமையான செய்தியை அனுப்ப முடியும் என்று தெரிவிக்கப்பட்ட கருத்து தொடர்பாக பதிலளித்த போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

‘நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்தும் பொறுப்பு உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்தும் இலங்கையிடம் கேள்வி எழுப்ப இந்த மாநாட்டைப் பயன்படுத்த முடியும் என்று பிரித்தானியா நம்புகிறது.

நல்லிணக்க ஆணைக்குழுவின் பல பரிந்துரைகள் நடமுறைப்படுத்தப்பட்டுள்ள போதிலும், இன்னும் பல நடைமுறைப்படுத்தப்படாமல் அப்படியே கிடக்கின்றன.

மனிதஉரிமைகள், நல்லிணக்கம், அரசியல்தீர்வு போன்றவற்றில் உறுதியான முன்னேற்றங்கள் தேவை என்று இலங்கை அரசுக்கு நாங்கள் ஒரு வியக்கத்தக்க – கடுமையான செய்தியை வழங்குவோம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பூமி மீது 2.8 கோடி ஆண்டுகளுக்கு முன்பு வந்து விழுந்து வாலாட்டிய வால் நட்சத்திரம்
Next post மூன்று வெளிநாட்டு பிரதிநிதிகள்