யாழில் இளம் குடும்பஸ்தர் குத்திக்கொலை

Read Time:1 Minute, 27 Second

knife-03யாழ்ப்பாணம், பழம் வீதி, ஆறுகால் மடம் பிரதேசத்தில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டுள்ளார்.

நேற்று இரவு 8.30 மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக யாழ். பொலிஸார் தெரிவித்தனர்.

பழம் வீதி, ஆறுகால் மடத்தைச் சேர்ந்த 30 வயதான தர்மராசா சத்தியபாபு என்பவரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

குடும்ப பிரச்சினை காரணமாக இந்த கொலைச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸாரது முதற்கட்ட விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது.

சடலம் கொலை செய்யப்பட்ட இடத்திலேயே வைக்கப்பட்டுள்ள அதேவேளை மரண விசாரணைகள் இன்று இடம்பெறவுள்ளன.

இந்த கொலைச் சம்பவம் தொடர்பில் உயிரிழந்தவரின் மனைவியின் தந்தை உட்பட மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேகநபர்கள் இன்று யாழ். நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை யாழ். பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ஆடைகளை கொள்ளையிட்ட பெண் கைது
Next post மன்னார் இளைஞன் சவூதியில் வாகன விபத்தில் உயிரிழப்பு