கண்டுபிடிப்பு: 8 அதிகாரிகள் மீது நடவடிக்கை!

Read Time:1 Minute, 32 Second

chinaசீனாவில் முறைகேடு, லஞ்ச, ஊழலில் ஈடுபடுவோருக்கு எதிரான நடவடிக்கை தற்போது சூடுபிடித்துள்ளது. புதிய அதிபர் ஜீ ஜின்பிங் பதவி ஏற்றதுமே கடும் நடவடிக்கை எடுக்க உத்தரவு பிறப்பித்ததே இதற்கு காரணமாகும். இதன் எதிரொலியாக பலர் சிறை தண்டனை பெற்றுள்ளனர்.

இந்நிலையில் அந்நாட்டின் பெரிய துறையாக திகழும் ரெயில்வேயில் புதிய முறைகேடு நடந்துள்ளது தெரியவந்தது. அதாவது ரெயில்வே கட்டுமான துறையினர் விருந்தினர்களுக்கு வரவேற்பு, விருந்து கொடுத்த வகையில் ரூ.810 கோடியை முறைகேடாக செலவிட்டு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

இது தொடர்பாக லஞ்ச தடுப்பு கண்காணிப்பு துறை விசாரிக்கிறது. 8 அதிகாரிகள் மீது தண்டனை நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும், ஒருவர் மீது வழக்கு தொடரப்படும் என்றும் அரசு கூறியுள்ளது.

ஆனால் தண்டனை விவரம் வெளியிடப்படவில்லை.இந்த ஊழல் விவகாரம் வெளியானதை அடுத்து ஊதாரி செலவு எதையும் செய்யக்கூடாது என்று ரெயில்வே அலுவலகங்களுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post இங்கிலாந்து இளவரசர் வில்லியம் குழந்தைக்கு 23–ந் தேதி பெயர் சூட்டு விழா!!
Next post பெல்­ஜி­யத்தில் சாகச வீரர்கள் பயணம் செய்த விமானம் விபத்து; 11 பேர் பலி!!