நோ பயர் ஸோன் திரையிட்டவர் மீதான குற்றச்சாட்டை மீளப் பெறுமாறு வலியுறுத்தல்!

Read Time:1 Minute, 33 Second

chaal4-001மலேசிய தணிக்கை குழுவின் அனுமதியின்றி சனல் 4 ஊடகம் தயாரித்த ‘நோ பயர் ஸோன்’ என்ற ஆவணப்படத்தை திரையிட்டதாக மலேசிய மனித உரிமை ஆர்வலர் லெனா ஹென்றி மீது வழக்குத் தொடரப்பட்டமையை மீளப் பெற வேண்டும் என மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் ஆசிய வலய உதவி பணிப்பாளர் பில் ரொபட்சன் தெரிவித்துள்ளார்.

இதன் மூலம் ஆவணப்படம் ஒன்றை திரையிட உள்ள அடிப்படை உரிமை மலேசிய அதிகாரிகளால் மீறப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார்.

இதனால் லெனா ஹென்றி மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டை வாபஸ் பெற்று மலேசியாவின் கலாசாரத்திற்கு ஏற்பட்ட பாதிப்புக்கு வேறு வழியில் தீர்வு காணப்பட வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.

லெனா ஹென்றி மீதான குற்றச்சாட்டு அரசியல் நோக்கம் கொண்டது என மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் ஆசிய வலய உதவி பணிப்பாளர் பில் ரொபட்சன் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

கோலாலம்பூரில் ஜூலை 3ம் திகதி நோ பயர் ஸோன் என்ற ஆவணப்படம் திரையிடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post விண்கற்களை முன்­கூட்­டியே எச்­ச­ரிக்கும் செய்மதி
Next post மெட்ராஸ் கஃபே’ ஒரு பக்கத்தை மட்டுமே சொன்னது: கமல்!!