பொதுநலவாய மாநாட்டுக்கு ஆதரவு; தெற்கு நோக்கி கையெழுத்திட்ட ஊர்தி

Read Time:1 Minute, 54 Second

commenகொழும்பில் நடைபெறவுள்ள பொதுநலவாய மாநாட்டிற்கு ஆதரவு தெரிவித்து வடக்கில் இருந்து தெற்கிற்கான ஊர்திப் பவனி யாழ்ப்பாணத்தில் இருந்து இன்று ஆரம்பமானது.

எதிர்வரும் நவம்பர் மாதம் கொழும்பில் நடைபெறவுள்ள பொதுநலவாய மாநாட்டிற்கு பல்வேறு தரப்புக்கள் எதிர்ப்புத் தெரிவித்துவருகின்ற நிலையில் தொலைக்காட்சி நிறுவனம் ஒன்றின் அனுசரணையில் வடக்கில் இருந்து தெற்கு நோக்கிய ஊர்திப் பவனி யாழ். நல்லூர் கந்தசுவாமி ஆலய முன்ரலில் இருந்து சர்வமத ஆசீர்வாதத்துடன் ஆரம்பமாகியது.

இந்த ஊர்திப் பவனி எதிர்வரும் 30ஆம் திகதி கொழும்பைச் சென்றடையவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதன்போது இராணுவத்தினர், பொலிஸார் அரச, அரச சார்பற்ற நிறுவன அதிகாரிகள், பொதுமக்கள் மற்றும் பாடசாலை மாணவர்கள் எனப் பலரும் கலந்து கொண்டு கையெழுத்துக்களை இட்டுச் சென்றனர்.

இந்த நிகழ்வில் சர்வமதத் தலைவர்கள், மேலதிக அரசாங்க அதிபர் ரூபினி வரதலிங்கம், யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சில்வெஸ்திரி அலென்ரின், யாழ். மாவட்டக் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் மகிந்த ஹத்துருசிங்க, ஆளுநரின் செயலாளர் இ.இளங்கோவன் யாழ். பல்கலைக்கழக துணைவேந்தர் வசந்தி அரசரட்ணம், இராணுவத்தினர், பொலிஸார் என மேலும் பலர் கலந்துகொண்டனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post இந்திய இராணுவத்தால் படுகொலை செய்யப்பட்டவர்களுக்கு அஞ்சலி
Next post நித்திரையிலிருந்த நால்வருக்கு தீ வைப்பு