நிதி நெருக்கடி தீர்ந்ததும், குடியுரிமை சீர்திருத்தம் -பரக் ஒபாமா

Read Time:1 Minute, 46 Second

us.obamaஅமெரிக்காவில் ஒபாமா அரசு நிறைவேற்ற விரும்புகிற ‘ஒபாமா கேர்’ என்னும் காப்பீட்டு திட்டத்துக்கு எதிர்க்கட்சியான குடியரசு கட்சி எதிர்ப்பு தெரிவித்து போர்க்கொடி உயர்த்தி வருவதால் அங்கு பட்ஜெட்டை நிறைவேற்ற முடியாமல் முட்டுக்கட்டை ஏற்பட்டுள்ளது. அமெரிக்க அரசு நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன.

அந்த நாட்டின் ஜனாதிபதி ஒபாமா, குடியுரிமை விதிகளில் சீர்திருத்தம் கொண்டு வர விரும்புகிறார். இதுவும் அங்கு கிடப்பில் போடப்பட்டுள்ளது.

இந்த நிலையில் டெலிவிஷன் ஒன்றுக்கு அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா பேட்டி அளித்தார்.

அப்போது அவர், ‘அமெரிக்காவில் நிதி நெருக்கடி முடிவுக்கு வந்த மறுநாளே நான் குடியுரிமை சீர்திருத்தத்தை கையில் எடுப்பேன். இதற்கான ஓட்டெடுப்புக்கு அழைப்பு விடுப்பேன்’ என்று கூறினார்.

அமெரிக்கா குடியுரிமை சீர்திருத்தம் கொண்டு வந்தால் அது இந்தியர்களை பாதிக்கும் என ஏற்கனவே தகவல்கள் வெளியாகின. சமீபத்தில் ஒபாமாவை சந்தித்து பேசிய பிரதமர் மன்மோகன் சிங், இது தொடர்பாக இந்தியாவின் கவலையை அவரிடம் தெரிவித்தது நினைவு கூரத்தக்கது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post தூக்கிட்டுக் கொன்றும் உயிர் பிழைத்தவரை, மீண்டும் தூக்கிலிட ஏற்பாடு
Next post 52 காதலிகள் கொண்ட சட்டத்தரணி: சொத்துகள் தொடர்பாக யுவதியுடன் சட்டப் போராட்டம்!