சுவிஸ் சூரிச்சில் புளொட் நடத்திய மேதின நிகழ்வுகள்

Read Time:1 Minute, 43 Second

சுவிஸ்லாந்தின் சூரிச் மாநிலத்தில் பிரதான புகையிரத நிலையத்திற்கு அருகாமையில் சென்ரல் என்னுமிடத்தில் சுவிஸ் இடதுசாரி சக்திகள், முற்போக்கு முன்னணிகள் என்பவற்றுடன் இணைந்து மாபெரும் மேதின ஊர்வலத்தை புளொட் அமைப்பின் சுவிஸ் மற்றும் ஜெர்மன் கிளையினர் இன்றுகாலை 10மணியளவில் நடத்தியுள்ளனர். சூரிச்சிலுள்ள சென்ரல் என்ற இடத்தில் ஆரம்பமான மேதினப் பேரணி சூரிச் மாநிலத்திலுள்ள கெல்வெத்தியா பிலாட்ஸ் என்னுமிடத்தில் நிறைவு பெற்றுள்ளது. இந்த ஊர்வலத்தில் பெண்கள், சிறுவர்கள் என பெருந்தொகையான மக்கள் கலந்துகொண்டனர். இதன்போது அடக்கு முறைகளுக்கு எதிரான பல கோஷங்களும் எழுப்பப்பட்டுள்ளன. அனைத்து அடக்குமுறைகளையும் உடைத்தெறிவோம், உழைக்கும் தொழிலாளர்களே ஒன்று சேருங்கள், கொல்லாதே கொல்லாதே ஜனநாயகவாதிகளை கொல்லாதே, பாசிச சக்திகளின் தாகம் பணப்பெட்டியும், பிணப்பெட்டியுமே என்பன ஊர்வலத்தின்போது எழுப்பப்பட்ட கோஷங்களாகும். இந்த மேதின நிகழ்வுகளில் ஈ.பி.ஆர்.எல்.எப் பத்மநாபா அணியைச் சேர்ந்த உறுப்பினர்களும் கலந்து கொண்டுள்ளனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பெண் ஒருவரைக் கர்ப்பிணியாக்கி ராணுவத்தளபதியைக் கொலைசெய்வதற்கு அனுப்பிய புலிகளின் நடவடிக்கை படுதோல்வி
Next post கருணாஅம்மானின் ரி.எம்.வி.பி. – வன்னிபுலிகள் மோதலின் மேலதிக விபரம்