மனித உரிமைகளில் முன்னேற்றம் காணப்பட வேண்டும்: பிரித்தானியா!

Read Time:1 Minute, 58 Second

UK‑sri‑lanka‑flagஇலங்கையில் இடம்பெறவுள்ள பொதுநலவாய மாநாட்டின் போது மனித உரிமைகள் விடயத்தில் முன்னேற்றம் ஏற்பட வேண்டும் என பிரித்தானியா வலியுறுத்தும் என இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகர் ஜான் ராங்கின் தெரிவித்துள்ளார்.

இலங்கைக்கான பிரித்தானிய உயர் ஸ்தானிகர் ஜான் ராங்கின், கொழும்பில் வெளிநாட்டு ஊடகவியலாளர்களிடம் கருத்துத் தெரிவிக்கும் போதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இலங்கைக்குசங்கடம் ஏற்படுத்தும் எண்ணம் பிரித்தானியாவுக்கு இல்லை. ஆனால் நல்லிக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளில் உறுதியான முன்னேற்றம் செய்ய வேண்டும்.

பல நாடுகளிலும் இலங்கையின் மனித உரிமைகள் தொடர்பான பிரச்சினைகள் கடந்த மாதம் எதிரொலித்தன.

இந்நிலையில், எதிர்வரும் நவம்பர் மாதம் நடைபெறும் பொதுநாலவாய மாநாட்டில் இலங்கை மனித உரிமை விடயங்கள் குறித்து பிரித்தானிய பிரதமர் கடும் செய்தியுடன் இலங்கை வருவார் என ஜோன் ராங்கின் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையில் மனித உரிமை விடயங்கள் குறித்து சமரசம், அரசியல் தீர்வு, குறித்த உறுதியான முன்னேற்றம் செய்ய வேண்டும் போன்ற தெளிவான செய்தியை பிரித்தானிய பிரதமர் வெளியிடுவார் என அவர் மேலும் சுட்டிக் காட்டியுள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post இணக்கம் எட்டப்படாத யோசனைகளை செயற்குழுவுக்கு அனுப்ப ஐ.தே.கட்சி தீர்மானம்!
Next post உறவை வலுப்படுத்த சீனா விருப்பம்!!