பயணிகள் மீது பிரபா குழுவினரே திட்டமிட்டு தாக்குதல் நடாத்தியுள்ளனர் -கருணா அம்மான்
அனுராபுரம் ஹெப்பட்டிக்கொல்லாவ பகுதியில் பயணிகள் மீது பிரபா குழுவினரே தாக்குதல் மேற்கொண்டனர். சர்வதேச சமூகம் தம்மீது பயங்கரவாதத் தடையை விதிக்குமானால் இலங்கையில் பெரும் அழிவு ஏற்படுமென ஐரோப்பிய ஒன்றியத்தின் தடைக்கு முன் பிரபா குழுவின் நிதிப் பொறுப்பாளர் புகழேந்தி பகிரங்கமாகவே எச்சரிக்கை விடுத்திருந்தார் என தமிழீழ மக்கள் விடுதலைப் புலிகளின் தலைவர் கருணா அம்மான் பி.பி.சி. செய்திச் சேவைக்கு வழங்கிய செவ்வியில் கூறியுள்ளார். அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில், படுகொலைகளைப் புரிந்துவிட்டு அதனை ஏனையவர்கள் மீது சுமத்துவது பிரபா குழுவின் வழமையான செயற்பாடுதான் எனவும் கூறினார். தமிழீழ மக்கள் விடுதலைப் புலிகள் துணைப்படை அல்ல என்பதைத் தெளிவாகக் கூறிய கருணா அம்மான் அது மக்களின் உரிமைக்காகப் போராடும் மக்கள் அமைப்பு எனவும் தெரிவித்தார்.
அவரின் பி.பி.சி செய்திச் சேவையுடனான செவ்வி வருமாறு.
பி.பி.சி – பிரபா குழுவின் கட்டுப்பாட்டுப் பகுதி மீது உங்களது போராளிகள் ஆழ ஊடுருவித் தாக்குவதாக பிரபா குழுவினர் குற்றஞ் சாட்டுகின்றனர். நீங்கள் இத் தாக்குதல்களை வட பகுதியில் பிரபா குழுவின் கட்டுப்பாட்டுப் பகுதியில் ஊடுருவித் தாக்குதல் நடாத்துகின்றீர்களா?
கருணா அம்மான் – எங்களது வேலைத் திட்டங்களை நாங்கள் பரவலாக எல்லா இடங்களிலும் மேற்கொண்டு வருகின்றோம். தாக்குதல்களைப் பொறுத்தவரை நாங்கள் மக்களைச் சந்திப்பதற்காக, அரசியல் வேலைகளுக்காக செல்லும் சமயங்களில் பிரபா குழுவினர் எம்மீது தாக்குதல் தொடுக்கும்போது நாங்கள் தற்காப்புத் தாக்குதல்களை மேற்கொள்கின்றோம். எம்மீது தாக்குதல் தொக்கப்பட்டால் எல்லா இடங்களிலும் தாக்குவதற்கு எமது போராளிகள் தயாராகவுள்ளனர்.
பி.பி.சி.- நீங்கள் இராணுவ உதவியுடன் இயங்குவதாக பிரபா குழுவினர் குற்றஞ் சாட்டுகின்றனர். இது உண்மையா?
கருணா அம்மான் – நாங்கள் இப்போது அரசியல் ரிதியாக எம்மை முன்னெடுத்து வருகின்றோம். மட்டக்களப்பில் எமது கிழக்கு மாகாண அரசியல் தலைமையகத்திலிருந்து அரசியல் பணிகளை மேற்கொண்டு வருகின்றோம். இது அரசாங்கத்திற்கும் தெரியும். நாங்கள் ஒரு அரசியல் அமைப்பு என்றவகையில் இலங்கையிலுள்ள அனைத்து அரசியல் கட்சிகளுடனும் தொடர்பகளை ஏற்படுத்தி வருகின்றோம். ஆனால் இராணுவ hPதியில் நாம் தனித்துவமாகவே இயங்குகின்றோம். எமக்கு யாரும் உதவி செய்யவுமில்லை, நாம் எதிர்பார்ப்பதுமில்லை.
பி.பி.சி. – உங்கள் அமைப்பும் பிரபா குழுவினரும் மோதலில் ஈடுபட்டுள்ளதால் பாதிக்கப்படப் போவது பொதுமக்கள்தானே?
கருணா அம்மான் – நிச்சயமாக நாம் இதனை ஏற்றுக்கொள்ளுகின்றோம். நாம் பிரிந்தவுடன் எமது ஆதரவாளர்கள்;, உறவினர்கள் என பல நு}ற்றுக் கணக்கான கிழக்கு மக்கள் பிரபாகரனின் உத்தரவினால் கொல்லப்பட்டனர், இப்போதும் கொல்லப்படுகின்றனர். எமக்கு மோதல் வேண்டாம் என்பதினால்தான் என்னிடமிருந்த போராளிகளை வீடுகளுக்கு அனுப்பினோம். நிராயுதபாணிகளான போராளிகளையும், மக்களையும் கொன்றதினால்தான் நாமும் தாக்க ஆரம்பித்தோம். நாங்கள் இப்போது எம் மக்களை அவர்களிடமிருந்து மீட்பதற்காகவே போராடுகின்றோம் இதில் இப்போது எமது மக்கள் பாதிக்கப்பட்டாலும் நிச்சயமாக எதிர்காலத்தில் அவர்களுக்கு விடிவு கிடைக்கும் என்பதில் எமக்கு உறுதியான நம்பிக்கையுண்டு.
பி.பி.சி.- ஜெனிவாப் பேச்சில் அரச தரப்புப் பிரதிநிதிகளுக்கும் பிரபா குழுவினருக்குமிடையில் முக்கிய விடயமாக அமைந்தது உங்களது அமைப்பின் செயற்பாடு குறித்ததுதான். பரந்த சமாதானத்தின் அடிப்படையில் உங்களது செயற்பாடுகளை நீங்கள்; இடைநிறுத்தலாமல்லவா?
கருணா அம்மான் – ஜெனீவாப் பேச்சு இடம்பெறுவதற்கு சில நாட்களுக்கு முன்பு நாங்கள் சமாதானச் செயற்பாடுகளுக்கு எங்களால் எவ்வித இடையூறு ஏற்படக் கூடாது என்பதற்காகவும், இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் சமாதானச் செயற்பாடுகளுக்கு ஆதரவளிக்கும் முகமாகவும் பிரபா குழுவுக்கு எதிராக ஒருதலைப் பட்சமான யுத்தநிறுத்தத்தை அறிவித்திருந்தோம். ஆனால் பிரபா குழுவினர் எம்மீது தொடர்ந்து தாக்குதல் நடாத்தியதனால் தற்காப்பிற்காக நாங்களும் தாக்குதல் நடாத்தவேண்டி ஏற்பட்டது.
பி.பி.சி.- உங்களது செயற்பாடுகளைக் குறைத்துக் கொண்டால் பிரபா குழு சமாதான நடவடிக்கைக்கு முன்வருவார்கள் என அரச தரப்பால் உங்களிடம் கோரப்பட்டதா?
கருணா அம்மான் – இவ்விடயங்கள் அரச தரப்பில் எமக்கு முன்வைக்கப்பட்டன. ஆனால் நாங்கள் இதற்கு உடன்பட்டு முன்வந்தாலும் பிரபா குழுவினர் உடன்பட மாட்டார்கள். அவர்கள் காலத்தை இழுத்தடிப்பதற்காகவே பேச்சுவார்த்தைகளைப் பயன்படுத்துகின்றனரே தவிர மக்களுக்கு உரிமைகள், நியாயமான தீர்வுகள் கிடைக்கவேண்டும் என்பதற்காக அல்ல. நாங்கள் ஒன்றுபட்ட இலங்கைக்குள் வடகிழக்கில் வாழ்கின்ற தமிழ், முஸ்லிம், சிங்கள மக்கள் ஒன்றுபட்டு ஒற்றுமையாக வாழக்கூடிய தீர்வையே முன்வைத்து செயற்படுகின்றோம். சர்வதேச சமூகம் பிரபா குழுவை பயங்கரவாத அமைப்பாகத் தடைசெய்து அதன் தலைவரை பயங்கரவாதியாக இனங்கண்டுவிட்டது. இவர்கள் இனி மக்களுக்கு எத் தீர்வையும் பெற்றுத்தர முடியாது. எனவும் கருணா அம்மான் அவரது செவ்வியில் தெரிவித்தார்.