நாட்­டுக்குள் இரு அர­சுகளை உரு­வாக்­கவே சர்­வ­தேசம் முயல்­கி­றது: தேசப்­பற்­றுள்ள தேசிய இயக்கம்!

Read Time:3 Minute, 15 Second

Sri-Lanka1தமிழ் மக்­களை பணயம் வைத்து அர­சாங்­கமும் கூட்­ட­மைப்பும் காய் நகர்த்­து­கின்­றன. பொது­ந­ல­வாய உச்சி மாநாட்டை நடத்­து­வ­தற்கு அர­சாங்­கமும் தடுப்­ப­தற்கு தமிழ் தீவி­ர­வாத சக்­தி­களும் முயற்­சிக்­கின்­றன என்று தேசப்­பற்­றுள்ள தேசிய இயக்கம் தெரி­வித்­துள்­ளது.

நாட்­டுக்குள் இரண்டு அர­சாங்­கங்­களை உரு­வாக்­கவே சர்­வ­தேச சக்­திகள் செயற்­ப­டு­கின்­றன. அர­சாங்­கத்தில் தீவி­ர­வாதக் குழு­வுக்கு கட்சி அந்­தஸ்து கொடுத்­த­மையே இதற்குக் காரணம் எனவும் அவ்­வி­யக்கம் குற்றம் சுமத்­தி­யுள்­ளது.

இது தொடர்­பாக தேசப்­பற்­றுள்ள தேசிய இயக்­கத்தின் தலைவர் குண­தாச அம­ர­சே­கர கருத்துத் தெரி­விக்­கையில்,

யுத்தம் முடி­வ­டைந்த பின்­னரும் வடக்கில் உள்ள தீவி­ர­வாதக் குழு­வான தமிழ் தேசிய கூட்­ட­மைப்­புக்கு கட்சி அந்­தஸ்தைக் கொடுத்­த­மையின் விளை­வா­கவே இன்று அர­சாங்­கமும் நாடும் நெருக்­க­டியைச் சந்­தித்துக் கொண்­டி­ருக்­கின்­றன.

சர்­வ­தேச நாடு­களின் பேச்சைக் கேட்டு ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக் ஷ வட மாகாண சபைத் தேர்­தலை நடத்­தி­ய­மையே அர­சாங்கம் செய்த முட்டாள் தன­மாகும். இதை இன்று வரை அர­சாங்கம் புரிந்து கொள்­ளா­துள்­ளமை வேடிக்­கை­யா­கவே உள்­ளது.

பொது­ந­ல­வாய உச்சி மாநாட்டை நடத்­து­வ­தனால் இலங்­கைக்கு எவ்­வித நன்­மை­களும் ஏற்­படப் போவ­தில்லை. இதில் கலந்து கொள்ளும் நாடு­களில் அதி­க­மான நாடுகள் இலங்­கைக்கு எதி­ரா­கவே கருத்துத் தெரி­விக்கும். எனவே இம்­மா­நாடு தொடர்பில் கவ­லைப்­பட வேண்­டிய அவ­சியம் இல்லை.

மேலும் தமிழ் தேசியக் கூட்­ட­மைப்­பும் அர­சாங்­கமும் வடக்கு மக்­களை வைத்தே காய் நகர்த்திக் கொண்­டி­ருக்­கின்­றன. யுத்­தத்­தையும் உயி­ரி­ழப்­பு­க­ளையும் காரணம் காட்டி தமிழ் தேசியக் கூட்­ட­மைப்பு வடக்கு மக்­களை ஏமாற்றி வெற்றி பெற்­றுள்­ளது.

அதே போல் சர்­வ­தேச சக்­தியின் உத­வி­யுடன் வடக்கு கிழக்கை இணைத்து தனி நாடாக்க விக்கி­னேஸ்­வரன், சம்­பந்தன் போன்றோர் முயற்­சித்தும் வரு­கின்­றனர்.

இவ்வனைத்து பிரச்சினைகளையும் தூண்டி விட்டு நல்லவர்களாக கூட்ட மைப்பினர் நாடகமாடுகின்றனர் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post கோண்டாவில் வாள்வெட்டுச் சம்பவத்தில் ஒருவர் படுகாயம்!
Next post இன்று பிறந்தநாள் கொண்டாடும் ‘புன்னகையரசி’ சினேகா