மனித உரிமைகள் துஷ்பிரயோகங்களை மூடி மறைக்கும் முயற்சியே: மன்னிப்புச் சபை!

Read Time:4 Minute, 6 Second

commenபொது நலவாய உச்சிமாநாடு நடைபெறவுள்ள கொழும்பிலும் ஏனைய அமைவிடங்களிலும் ஆர்ப்பாட்டப் பேரணிகளை நடத்துவதற்கு தடைவிதிக்கும் பொருட்டு அரசாங்கத்தினால் எடுக்கப்படவுள்ள நடவடிக்கையானது மனித உரிமைகள் துஷ்பிரயோக செயற்பாடுகளை தரைவிரிப்பின் கீழ் மூடி மறைக்கவென மேற்கொள்ளப்படவுள்ள வெளிப்படையான முயற்சி ஒன்றாகவே இருக்கப் போகின்றதென லண்டனைத் தளமாகக் கொண்டியங்கிவரும் சர்வதேச மன்னிப்புச்சபை குற்றம்சாட்டியுள்ளது.

இது குறித்து மனித உரிமைகளுக்காகப் போராடிவரும் மேற்படி அமைப்பு விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:-

இலங்கையில் அடுத்தமாதம் முதல் மூன்று வார காலப்பகுதியில் பொது நலவாய நாடுகளின் பிரதிநிதிகள் விஜயம் செய்வரென எதிர்பார்க்கப்படும். கொழும்பிலும் ஏனைய இடங்களிலும் ஆர்ப்பாட்டங்கள் பேரணிகளை நடத்துதல் பதாகைகளையும் கறுப்புக் கொடிகளையும் காட்சிப்படுத்தல் போன்ற நடவடிக்கைளை அரசாங்கம் தடைசெய்யப் போவதாக எமக்கு அறியக் கிடைத்துள்ளது.

அரசின் இத்தகைய நடவடிக்கையானது பொது நலவாய அரச தலைவர்கள் சந்திக்கவுள்ள நிலையில் சிவில் சமூக தீவிர செற்பாட்டை அடக்கு ஒடுக்கச் செய்யும் இன்னுமொரு அப்பட்டமான முயற்சியாகவே கருதப்படுகின்றது.

கடந்த பல வருடங்களாக தனக்கு எதிராக செயற்பட்டோரை மெளனிக்கச் செய்வதற்கென இலங்கை அரசாங்கம் இரும்புக்கரம் கொண்டு மேற்கொள்ளப்பட்டிருந்த பிரயத்தனங்களுக்கு மிகவும் பொருந்தக்கூடியதாவே உள்ளதென சர்வதேச மன்னிப்புச் சபையின் ஆசிய விவகாரங்களுக்கான பிரதிப் பணிப்பாளர் பொலி ட்ரஸ் கொட் தெரிவித்துள்ளார்.

அவர் அதில் மேலும் குறிப்பிடுகையில்;-

கருத்து வெளிப்பாட்டு சுதந்திரம் மற்றும் அமைதியானமுறையில் ஒன்று கூடுதல் உள்ளிட்ட மனித உரிமைகளுக்கு மதிப்பளிக்கும் பொது நலவாய விழுமியங்களை இத்தகைய தடைவிதிப்பானது பறக்கவே வைக்கவுள்ளது.

இலங்கை அரசினால் எடுக்கப்படவுள்ள இத்தகைய ஆகப்பிந்திய நடவடிக்கையானது மனித உரிமைகளை மதிக்கத் தவறியுள்ள இலங்கை பொது நலவாய நாடுகள் அரச தலைவர்கள் மாநாட்டை நடத்திட அனுமதிக்கப்படவே கூடாதென பொது நலவாய அமைப்பிற்கு விடுக்கப்படும் இன்னுமொரு ஞாபகமூட்டலாகவே கருதப்படவேண்டும்.

இலங்கையில் மேற்கொள்ளப்பட்டுவரும் மனித உரிமைகள் துஷ்பிரயோகங்களை அங்கு விஜயம் செய்யவுள்ள உலகத் தலைவர்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் அறிந்து கொள்ளாவண்ணம் மூடி மறைப்பதற்கென இலங்கை அரசு எவ்வாறு முயற்சிக்கின்றதென்பதையே இத்தகைய ஆர்ப்பாட்ட தடைவிதிப்பு நடவடிக்கை எடுத்துக் காட்டுகின்றது.

இலங்கை அரசின் இத்தகைய பூசி மெழுகும் நடவடிக்கையை பொதுநலவாயம் அனுமதிக்கக் கூடாதெனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post மாடியிலிருந்து குழந்தையுடன் விழுந்து இந்தியப் பெண் பலி: கணவர் கைது!!
Next post 250 குடியேற்றவாசிகளுடன் படகு கவிழ்ந்தது!