ஆளுந்தரப்பு யோசனை முறியடிப்பு!

Read Time:1 Minute, 49 Second

Unp-Jvp-logoவடமேல் மாகாண தவிசாளர் பதவிக்கு நியமிக்கப்பட்ட தர்மசிரி தசநாயக்க, கட்சியினால் மேற்கொள்ளப்பட்ட தீர்மானத்தை மீறியுள்ளதாக வடமேல் மாகாண சபை உறுப்பினர், இந்திராணி தசநாயக்க குற்றஞ்சாட்டியுள்ளார்.

அந்த மாகாண சபையில் இன்று இடம்பெற்ற ஆரம்ப நிகழ்வில் ஐக்கிய தேசிய கட்சியால் முன்மொழியப்பட்ட ஆளுந்தரப்பு உறுப்பினர் தர்மசிரி தசநாயக்க தெரிவு செய்யப்பட்டார்.

தர்மசிறி தசநாயக்க 8 மேலதிக வாக்குகளால் தெரிவானார்.

இது தொடர்பில் இன்று இடம்பெற்ற வாக்கெடுப்பின் போது தர்மசிரி தசநாயக்காவிற்கு 30 வாக்குகள் கிடைக்கப் பெற்றன.

ஆளும் தரப்பினால் முன்மொழியப்பட்ட இந்திராணி தசநாயக்வுக்கு 22 வாக்குகள் மட்டுமே கிடைத்தன.

அண்மையில், ஜனாதிபதி தலைமையில், இடம்பெற்ற முதலமைச்சர் சத்தியப் பிரமாண நிகழ்வின் போது, ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் அமைச்சர் சுசில் பிரேமஜயந்தவினால் மகாணசபையின் ஏனைய அங்கத்தவர்கள் தொடர்பான பெயர் பட்டியல் விபரங்கள் வெளியிடப்பட்டன.

இதன்போது, வடமேல் மாகாண சபையின் தவிசாளராக இந்திராணி தசநாயக்காவின் பெயர் பரிந்துரைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. 

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post சட்டவிரோதமாக தங்கத்தை கொண்டு செல்ல முயற்சித்த நபர்கள் கைது!
Next post மாடியிலிருந்து குழந்தையுடன் விழுந்து இந்தியப் பெண் பலி: கணவர் கைது!!